Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கரூர் சம்பவத்தில் பொய் செய்தி.. யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு அதிரடி கைது!

Youtuber Felix Arrest : கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பரப்புரையில் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பெய்யான செய்திகளை பரப்பியதற்காக யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை போலீசார் கைது செய்துள்ளனர்.

கரூர் சம்பவத்தில் பொய் செய்தி.. யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு அதிரடி கைது!
யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 30 Sep 2025 10:49 AM IST

சென்னை, செப்டம்பர் 30 : கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பரப்புரையில் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பெய்யான செய்திகளை பரப்பியதற்காக யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைதாகி உள்ளார். 2025 செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழக தவைலர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். நாமக்கல்லில் பிரச்சாரத்தை முடித்த அவர், இரவில் கரூருக்கு விரைந்தார். அங்கு வேலுசாமிபுரத்தில் பரப்புரை செய்தார். அங்கு  20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள்,  ரசிகர்கள் கூடி இருந்தனர். அப்போது, கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இதில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்ட படுகாயம் அடைந்தனர்.   இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், சமூக வலைதளங்களில் பலரும் வதந்திகளை பரப்பி வருகின்றனர். திமுகவை ஒரு தரப்பினர் விமர்சித்தும், தவெகவை மற்றொரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.

Also Read : கரூர் சம்பவம்.. மற்றொரு தவெக நிர்வாகி கைது.. புஸ்ஸி ஆனந்தை நெருங்கும் தனிப்படை?

யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது


இதனால், 25க்கும் மேற்பட்ட சமூக வலைதளங்களை போலீசார் நீக்கியுள்ளனர். சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அதன்படி, பெரும்பாக்கம் பகுதியைச் நேர்ந்த பாஜக நிர்வாகி சகாயம், மாங்காடு தவெக உறுப்பினர் சிவனேசன், ஆவடி தவெக உறுப்பினர் சரத்குமார் ஆகியோர் கைதாகி உள்ளார்.

Also Read : ‘செந்தில் பாலாஜி தான் காரணம்’ விஜய் தொண்டர் எடுத்த விபரீத முடிவு.. சிக்கிய கடிதம்!

இது தொடர்பாக 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, பிரபல யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நுங்கம்பாக்கத்தில்  உள்ள தனது வீட்டில் இருந்து ஃபெலிக்ஸ் ஜெரால்டை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு மாநில அரசைக் குற்றம் சாட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.