கரூர் சம்பவம்… எந்த ஒரு கட்சித் தலைவரும் விரும்ப மாட்டார்…. முதல்வர் ஸ்டாலின் வருத்தம்
Karur Tragedy : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பரப்புரையில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப வேண்டாம் கேட்டுக்கொண்டார்.

கரூரில் தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vettri Kazhagam) சார்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில் ஏற்றபட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமைடந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கதறி அழும் காட்சிகள் காண்போரை நெகிழச் செய்தது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தமிழக அரசு சார்பில் விசாரணை குழு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் சம்பவ இடத்தில் கடந்த 2 நாட்களாக அவர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.
பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, கரூரில் நடந்துள்ள துயர சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப வேண்டாம். அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். எந்த அரசியல் கட்சித் தலைவரும் தன் தொண்டர்களும் அப்பாவி மக்கள் உயிரிழப்பதை விரும்ப மாட்டார்கள் என்றார்.
இதையும் படிக்க : விஜய் வீட்டுக்கு வெடி குண்டு மிரட்டல் – நிபுணர்கள் தீவிர சோதனை
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ
கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் – வதந்திகளையும் பரப்ப வேண்டாம்.
அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.#KarurTragedy pic.twitter.com/Ihum9qIWNY
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) September 29, 2025
இதையும் படிக்க : முதல் தவறு இவங்க மீது தான், ஏன் அனுமதி கொடுக்கிறார்கள்? – அண்ணாமலை கேள்வி
மேலும் பேசிய அவர், ”நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை கிடைத்த பிறகு, எல்லா அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்ச்சிக்கான விதி, நெறிமுறைகள் வகுக்கக்கப்படும். இந்த நெறிமுறைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தருவார்கள் என்று நான் நம்புகிறேன். அரசியல் நிலைப்பாடுகள் கொள்கை முரண்பாடுகள், தனிமனிதப் பகைகள் என அனைத்தையும் விலக்கி வைத்து விட்டு, அனைவரும் மக்கள் நலனுக்கா சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுப்பது நம் அனைவரின் கடமை என்று பேசியிருந்தார்.
வதந்திக்கு முற்றுப்புள்ளி
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலுக்கு இரவோடு இரவாக 39 பேருக்கும் பிரேத பரிசோதனை நடைபெற்றது. இந்த நிலையில் இரவு பிரதே பரிசோதனை செய்யப்பட்டது சட்டவிரோதம் என ஒரு தகவல் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு உண்மை சரிபார்ப்பகம் இதுகுறித்து விளக்கமளித்துள்ளது. அதில், இரவு நேரங்களில் பிரேத பரிசோதனை செய்யலாம். இதற்கான கட்டமைப்பு வசதிகள் மருந்துவமனையில் இருந்தால் போதும், கடந்த 2021, நவம்பர் 15 ஆம் தேதி ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்ட அலுவலகக் குறிப்புரையில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நிலையிலும் இரவில் பிரதே பரிசோதனை செய்யலாம் என குறிப்பிட்டுள்ளது.