Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – அவதூறு பரப்பியதாக ஒரு பாஜக, 2 தவெகவினர் கைது

Karur Stampede : கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமைடந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பார்க்கலாம்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – அவதூறு பரப்பியதாக ஒரு பாஜக, 2 தவெகவினர் கைது
விஜய் பரப்புரை மேற்கொண்ட இடம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 29 Sep 2025 21:28 PM IST

சென்னை, செப்டம்பர் 29 : தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கரூரில் கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று நடந்த பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த சம்பவத்துக்கு காரணம் என ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் கரூர் கூடட் நெரிசல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பதிவிட்டதாக 25 பேர் வழக்கு பதிவு செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக 3 பேர் கதைு செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்பியதாக 3 பேர் கைது

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த 2 பேர், பாஜவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெரும்பாக்கத்தில் வசிக்கும் பாஜகவை சேர்ந்த சகாயம், ஆவியில் வசிக்கும் தவெகவைச் சேர்ந்த சரத்குமார், மாங்காடு பகுதியில் வசிக்கும் தவெகவைச் சேர்ந்த சிவனேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிக்க : மக்களின் அழுகுரலை கடந்துசெல்வதற்கான வழியின்றி தவிக்கிறேன் – ஆதவ் அர்ஜுனா பதிவு..

25 சமூக வலைதள கணக்குகள் மீது வழக்கு

கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பொது அமைதி பாதிக்கும் வகையில் வதந்தி பதிவுகளை பதிவு செய்ததாக பெறப்பட்ட புகார்களின் பேரில் 25 சமூக வலைதளங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்க்கட்சிகள் யாரும் இதுவரை எந்த அரசியலும் செய்யவில்லை. ஆனால் இன்று முதல்வர் வெளியிட்ட வீடியோ தான் பல்வேறு அரசியல் சந்தேகங்களை எழுப்புகிறது. கரூர் துயரத்துக்கு உரிய நீதி கிடைக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிக்க : தொடரும் சோகம்.. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி மேலும் ஒருவர் உயிரிழப்பு.. பலி எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு..

எடப்பாடி பழனிசாமிக்கு அன்பில் மகேஷ் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையின் போது, கூட்ட நெரிசலில் உயிரிழிந்தவர்களின் கண்டு அன்பில் மகேஸ் அழுதது குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு பதிலளித்த அன்பில் மகேஸ், கடந்த சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டதால் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தார். அதனால் பன்னீர் செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை கண்ணீரோடு பதவியேற்றது. அப்போது அழுததுபோல் நடித்தவரா இன்று அழுகையைப் பற்றி பேசுவது என கேள்வி எழுப்பியிருந்தார்.