அடுத்த 30 நாளில் திருமணம்.. கரூரில் பறிபோன காதல் ஜோடி.. கதறும் குடும்பம்!
TVK Rally Stampede : கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரப்புரையின்போது நிச்சயிக்கப்பட்ட திருமண ஜோடி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த ஜோடிக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) திருமணம் நடைபெற இருந்த நிலையில், அவர்கள் பரிதாபமாக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிந்தனர்.

உயிரிழந்த காதல் ஜோடி
கரூர், செப்டம்பர் 28 : கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்ஜோடி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த ஜோடிக்கு 30 நாட்களில் திருமணம் நடைபெற இருந்து நிலையில், பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் 2025 செப்டம்பர் 27ஆம் தேதியான நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டு இருந்தார். கரூர் வேலுசாமிபுரம் பகுதியில் விஜய் தன் வாகனத்தில் பரப்புரை மேற்கொண்டார். மாலை 5 மணிக்கு பரப்புரை மேற்கொண்டிருக்கும் நிலையில், தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் பெரும் கூட்டத்தால் தாமதமானது. இதனை எடுத்து தவெக தலைவர் விஜய் கரூருக்கு இரவு 7:00 மணிக்கு வந்தடைந்தார். விஜய் வருவதற்கு முன்பே அங்கிருந்த தொண்டர்களும் ரசிகர்களும் மயக்க நிலையில் இருந்துள்ளனர்.
விஜய் பேச ஆரம்பித்த உடனேயே பலரும் மயக்கமடைந்து விழுந்துள்ளனர். இதனை எடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சொல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10 குழந்தைகள், 17 பெண்கள், 12 ஆண்கள் என 39 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த துயர சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் தங்கள் உறவினர்களையும் குடும்பத்தினரையும் எழுந்து வாடிய மக்கள் அழுது துடித்து அழுது துடித்துள்ளனர். இந்த நிலையில் இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி நிச்சயிக்கப்பட்ட ஜோடி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அதாவது, கரூர் மாவட்டம் வடக்கு காமராஜபுரத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் ஆகாஷ். இவருக்கு ஒப்பிட மண்டலம் பகுதியை சேர்ந்த கோகுல ஸ்ரீ என்ற பெண்ணுக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் முடிவு செய்யப்பட்டது. இவர்களது திருமணத்திற்கு இன்னும் 30 நாட்களே உள்ளன. சமீபத்தில் தான் இரு விட்டாரின் சமூகத்துடன் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த நிலையில் தான் கரூருக்கு விஜய் பரப்புரைக்கு கோகுல ஸ்ரீ மற்றும் ஆகாஷ் சென்றுள்ளனர்.
Also Read : கரூர் கொடூரம்.. சுயாதீன விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் நாடும் த.வெ.க..
கரூரில் பறிபோன காதல் ஜோடி
கோகுல ஸ்ரீ அவர் அவர் தம்பியுடன் வந்துள்ளார் . எனவே ஆகாஷ், கோகுலஸ்ரீ, அவரது சகோதரர் நம் மூன்று பேரும் விஜய் பரப்புரையில் கலந்து கொண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஆகாஷ் மற்றும் கோகுல ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் கூட்ட நெரிசலுக்கு முன்பாகவே கோகுலஸ்ரீ என் தம்பி கூட்டத்தை விட்டு வெளியேறியதால் அவர் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கோகுலர்ஷியின் தாயார் கண்ணீர் மல்க பேட்டி அளித்திருந்தார். பார்ப்போரை ஒரு கணம் பதற வைத்திருந்தது.
அவர் பேசுகையில், எனது மகள் கோகுல ஸ்ரீ கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். அடுத்த மாதம் ஆகாசுக்கும் என் மகளுக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இருவருக்கும் 24 வயது ஆகிறது. கரூரில் விஜய் பிரச்சாரம் நடப்பதால் எனது மகளை அனுப்பி வைத்திருந்தேன். இந்த சம்பவத்திற்கு முன்பாக எனது போனில் அவரிடம் பேசியபோது உறவினர் வீட்டின் மாடியில் இருப்பதாக அவர் கூறியிருந்தார்.
Also Read : கரூர் கூட்ட நெரிசல்.. உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு
அங்கிருந்து அவர் இறங்கி வந்த போது தான் கூட்ட நெரிசலில் சிக்கி எனது மகளும் மருமகனையும் மிதித்துக் கொண்டுள்ளனர். இதில் என் மகன் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். ஆசையாக வளர்த்த என் மகள் நிரந்தரமாக என்னை விட்டு பிரிந்து சென்று விட்டாள்” என கண்ணீர் மல்க கோகுலஸ்ரீ என் தாயார் பேட்டி அளித்தது அனைவரின் மனதையும் கலங்க வைத்தது