கரூர் துயரம்.. முதல்வர் ஸ்டாலினின் 2 நாட்கள் நிகழ்ச்சிகள் ரத்து!
TVK Chief Vijay Rally Stampede : கரூர் கோர சம்பவத்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, 2025 செப்டம்பர் 28,29ஆம் தேதிகளில் நடைபெற இருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரூரில் தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கரூர், செப்டம்பர் 28 : கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தை அடுத்து, 2025 செப்டம்பர் 28,29ஆம் தேதிகளில் நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலினின் இன்றைய தி.நகர் மேம்பால திறப்பு நிகழ்ச்சி, நாளை (செப்டம்பர் 28) ராமநாதபுரம் செல்லும் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், திமுக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மூன்றாவது கட்டமாக நாமக்கல், கரூரில் பிரச்சார பயணம் மேற்கொண்டார். நாமக்கல் பரப்புரையை முடித்துக் கொண்டு, கரூருக்கு 2025 செப்டம்பர் 27ஆம் தேதியான நேற்று மாலை வந்தபோது, அவரைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். பிரசாரம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் விஜய் இரவு 7 மணிக்கு பேசத் தொடங்கினார்.
அப்போது, காண தொண்டர்கள் முண்டியத்தபடி கூட்டம் தொடர்ந்து அதிரித்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டு, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதனை அடுத்து, பலரும் மயங்கி விழுந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்க 39 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தது ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. தொடர்ந்து, அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
Also Read : கரூரில் பெருந்துயரம்.. ரத்து செய்யப்படுகிறதா விஜயின் பரப்புரை? அடுத்த பிளான் என்ன?
முதல்வர் ஸ்டாலினின் 2 நாட்கள் நிகழ்ச்சிகள் ரத்து
கரூர் கோர சம்பவத்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, 2025 செப்டம்பர் 28,29ஆம் தேதிகளில் நடைபெற இருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரூரில் தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், காயம் அடைந்தவர்கள் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்து இருந்தார். மேலும், 2025 செப்டம்பர் 28ஆம் தேதியான இன்று காலை சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் கரூர் மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். அதோடு, உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
Also Read ; விஜய் கைது செய்யப்படுவாரா? முதல்வர் ஸ்டாலின் சொன்ன பதில்!
தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது. மேலும், இந்த விவகாரத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது. இந்த துயர சம்பவத்தை அடுத்து, முதல்வர் ஸ்டாலினின் 2 நாட்கள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திமுக நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன.