Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னை கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ்.. வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் – போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்..

Chennai Fisherman Protest: சென்னை கடற்கரைக்கு நீலக்கொடு சான்றிதழ் காரணமாக, காஸ்ட் மற்றும் சீன் வலைகள் மற்றும் மீன் உலர்த்துதல் போன்ற பாரம்பரிய மீன்பிடி நடைமுறைகள் கொல்லப்படும் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர். மூன்று கடற்கரைகள் சேர்க்கப்பட்டதால், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

சென்னை கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ்.. வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் – போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 28 Sep 2025 11:05 AM IST

சென்னை, செப்டம்பர் 28, 2025: தென் சென்னை அனைத்து மீனவ கிராம சபை தலைமையில், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள 26 கடலோர கிராமங்களைச் சேர்ந்த மீனவ சமூகத்தினர், கடற்கரையில் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட திட்டங்களுக்கு எதிராக ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சில கடற்கரைகளுக்கு நீலக் கொடி சான்றிதழ் பெறுவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களும் அடங்கும். சென்னை மாநகராட்சி, மாநில அரசு மற்றும் மத்திய அரசு முன்மொழிந்த மூன்று முக்கிய திட்டங்களை அவர்கள் எதிர்த்தனர் – சென்னை முழுவதும் நான்கு இடங்களில் நடந்து வரும் நீலக் கொடி கடற்கரைத் திட்டங்கள், எண்ணூர்-பூஞ்சேரி கடல் பாலம் மற்றும் தமிழக கடற்கரையில் கடல் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வு முயற்சி ஆகியவை அடங்கும்.

நீலக்கொடி சான்றிதழ்:

மெரினா திருவான்மியூர் பாலவாக்கம் மற்றும் முத்தண்டி கடற்கரைகளுக்கு டென்மார்க் தளமாக கொண்டு சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை வழங்கிய சுற்றுச்சூழல் லேபிலான சர்வதேச நீலக் கொடி சான்றிதழை பெறுவதற்காக புத்த ரூபாய் 24.28 கோடி செலவில் சென்னை மாநகராட்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது மெரினாவில் நீச்சல் குளத்திற்கு அருகில் ரூபாய் 7 புள்ளி 31 கோடியில் உருவாக்கப்பட்ட திட்டத்தின் முதல் கட்டம் நிறைவடைந்துள்ள நிலையில் இரண்டாம் கட்டம் மகாத்மா காந்தி சிலை முதல் நொச்சி நகர் வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம்:

இந்தத் திட்டங்கள் கடற்கரைக்கு அணுகலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்றும், இதனால் காஸ்ட் மற்றும் சீன் வலைகள் மற்றும் மீன் உலர்த்துதல் போன்ற பாரம்பரிய மீன்பிடி நடைமுறைகள் கொல்லப்படும் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர். சென்னையின் தெற்கில் உள்ள மூன்று கடற்கரைகள் சேர்க்கப்பட்டதால், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் படிக்க: கரூர் துயரம்.. முதல்வர் ஸ்டாலினின் 2 நாட்கள் நிகழ்ச்சிகள் ரத்து!

எண்ணூர்-பூஞ்சேரி கடல் பாலம் அவசியமா என கேள்வி:

அவர்கள் எதிர்த்த மற்றொரு திட்டம், முன்மொழியப்பட்ட 92 கி.மீ. எண்ணூர்-பூஞ்சேரி கடல் பாலம் ஆகும். இந்தத் திட்டத்திற்காக உயர்த்தப்பட்ட தூண்கள் மீன்பிடி வலைகளுக்கு இடையூறாக இருக்கும், உபகரணங்களை சேதப்படுத்தும், படகுகள் மற்றும் மீன்பிடித் தளங்களின் பாதைகளை சீர்குலைக்கும் என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.

முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்ன?

மேலும், திட்டங்களை திரும்பப் பெற்று, அதற்கு பதிலாக தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் நிலங்களுக்கு பட்டா வழங்கவும், கூடுதல் நலத்திட்டங்களை செயல்படுத்தவும், வாழ்வாதாரத்தை சட்டப்பூர்வமாகப் பாதுகாக்கவும், திட்டங்களை கைவிடுமாறு போராட்டக்காரர்கள் அதிகாரிகளை வலியுறுத்தினர். முதலீடுகள் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கில் மட்டும் கவனம் செலுத்தாமல், கடலோரப் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க: சட்டவிரோதமாக செயல்பட்டதாக மிரட்டிய கும்பல்.. இளம் பெண்ணை ஏமாற்றி ரூ.73 லட்சம் மோசடி.. பகீர் சம்பவம்!

தென்னிந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் கே. பாரதி கூறுகையில், “அவர்கள் எங்கள் நலனுக்காக உழைப்பார்கள் என்று நம்பி நாங்கள் வாக்களித்தோம். இந்தத் திட்டங்கள் நிறைவேறினால், இன்று கூடியிருக்கும் தெற்கு சென்னை மீனவர்களைப் போலவே; வடக்கு சென்னை மற்றும் தேவைப்பட்டால், மாநிலம் முழுவதும் உள்ள மீனவர்களும் போராட்டங்களில் இணைவார்கள்” என்றார்.