ஆண் நண்பருடன் பேசிய பெண்.. ஆத்திரத்தில் குத்திக் கொன்ற காதலன்.. காஞ்சிபுரத்தில் பயங்கரம்!

Kanchipuram Murder : காஞ்சிபுரத்தில் இளம்பெண்ணை அவரது காதலன் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆண் நண்பருடன் பெண் தொடர்ந்து பேசி வந்ததால், இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று இளம்பெண்ணை, அவரது காதலன் கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆண் நண்பருடன் பேசிய பெண்.. ஆத்திரத்தில் குத்திக் கொன்ற காதலன்.. காஞ்சிபுரத்தில் பயங்கரம்!

பெண் கொலை

Published: 

20 Jul 2025 17:41 PM

காஞ்சிபுரம், ஜூலை 20 : காஞ்சிபுரத்தில் இளம்பெண்ணை அவரது காதலன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆண் நண்பருடன தொடர்ந்து பேசி வந்ததால், ஆத்திரத்தில் பெண்ணை, அவரது காதலன் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தர்யா. இவர் அப்பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். அவரது வீட்டிற்கு அருகே இருந்தவர் தினேஷ். இருவரும் ஒரே இடத்தில் தங்கி இருந்ததால், இவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. அடிக்கடி இருவரும் வெளியே சென்றும் இருக்கின்றனர். இவர்கள் இரண்டு பேரும் 2 வருடங்கள் காதலித்து வந்த நிலையில், இந்த விஷயம் இருவரின் வீட்டிற்கும் தெரிந்துள்ளது. இதனை அடுத்து, இருவீட்டாரும் இவர்களது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, கடந்த 2025 ஏப்ரல் மாதம் இருவீட்டாரின் சம்மத்துடன் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதற்கிடையில், பெண் சௌந்தர்யா ஆண் நண்பருடன் அடிக்கடி பேசி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த தினேஷ், சௌந்தர்யாவை கண்டித்துள்ளனர். இதனால், இருவருக்கும் அடிக்கடி சண்டை எற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும், சௌந்தர்யா ஆண் நண்பருடன் பேசுவதை நிறுத்தவில்லை. இந்த நிலையில், 2025 ஜூலை 19ஆம் தேதியான நேற்று, மீண்டும் ஆண் நண்பருடன் சௌந்தர்யா பேசி இருக்கிறார்.

Also Read : திண்டுக்கல்: ஆசிரியரை மிரட்டிய சிறுவனின் தற்போதைய நிலை தெரியுமா?

இதனால் இருவருக்கு சண்டை ஏற்பட்ட நிலையில், ஆத்திரத்தில் தினேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சௌந்தர்யாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில், சௌந்தர்யாவின் கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து சௌந்தர்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை அடுத்து, தினேஷ் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த சௌந்தர்யாவை மீட்டு பிரேத பரிசோதனைக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Also Read : காதலுடன் செல்போனில் பேச்சு: தாலியை கழற்றி வெளியேறிய புதுப்பெண்: கடலூரில் பரபரப்பு

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண்ணை கொலை செய்த திணேஷை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். இது தொடர்பாக போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம்பெண்ணை, அவரது காதலன் குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.