AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குளிருமா தமிழகம்? ஏப்ரல் 5 வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

Tamil Nadu Weather: தமிழகத்தின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஏப்ரல் 5-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குளிருமா தமிழகம்? ஏப்ரல் 5 வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் மழைImage Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 30 Mar 2026 14:15 PM IST

தமிழகத்தில் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த ஏழு தினங்களுக்கு பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 2026 மார்ச் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 1 முதல் 3 வரை தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா பகுதிகள் மற்றும் காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏப்ரல் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.வெப்பநிலையைப் பொறுத்தவரை, அடுத்த சில நாட்களில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸாக இருக்கும்.மீனவர்களுக்கான பிரத்யேக எச்சரிக்கை ஏதுமில்லை என்பதால் ஏப்ரல் 3 வரை கடலுக்குச் செல்வதில் எவ்வித தடையுமில்லை.

கடந்த 24 மணி நேர வானிலை நிலவரம்

கடந்த ஒரு நாளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தின் குண்டேரிப்பள்ளத்தில் அதிகபட்சமாக 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தின் கின்னக்கோரையில் 4 சென்டிமீட்டரும், மேல் பவானி, திருச்செங்கோடு மற்றும் பவானிசாகர் பகுதிகளில் தலா 2 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. தேனி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் சில பகுதிகளிலும் லேசான மழை பெய்துள்ளது. இருப்பினும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது. சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையாக வேலூரில் 40.3° செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக நாமக்கல்லில் 23.0° செல்சியஸும் பதிவாகியுள்ளது. மலைப்பிரதேசமான கொடைக்கானலில் 9.9° செல்ஸியஸ் வெப்பநிலை நிலவியது.

அடுத்த ஏழு தினங்களுக்கான மழை முன்னறிவிப்பு

தற்போது வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, மார்ச் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏப்ரல் 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களிலும் மழையை எதிர்பார்க்கலாம். ஏப்ரல் 3-ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் எனப் பரவலாக ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வெப்பநிலை மாற்றம் மற்றும் சென்னை நிலவரம்

அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரை, ஏப்ரல் 3-ஆம் தேதி வரை பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது என்றாலும், சில இடங்களில் வெப்பம் சற்று குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும், தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸாகவும் இருக்கும். கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று அல்லது புயல் எச்சரிக்கை ஏதுமில்லாததால், மீனவர்கள் ஏப்ரல் 3 வரை கடலுக்குச் செல்ல எவ்வித தடையுமில்லை.

Follow Us