கொதிக்கும் தண்ணீரில் விழுந்து பலியான பச்சிளம் குழந்தை.. பதைபதைக்கும் சம்பவம்!
Madurai 7 Months Old Infant Death | மதுரையில் கட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்த 7 மாத பெண் குழந்தை கொதிக்கும் தண்ணீரில் விழுந்தது. குழந்தையை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், அது சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை, நவம்பர் 03 : மதுரை (Madurai) 7 மாத குழந்தை (7 Month Infant) சுடு தண்ணீரில் விழுந்து உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை கட்டிலில் தூங்க வைகப்பட்ட நிலையில் அதற்கு அருகே வாட்டர் ஹீட்டர் மூலம் தண்ணீர் கொதிக்க வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதில் தவறி விழுந்த குழந்தை பரிதாபமாக பலியாகியுள்ளது. இந்த நிலையில், கட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்த குழந்தை, சுடு தண்ணீரில் விழுந்து பலியானது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சுடு தண்ணீரில் விழுந்து பலியான 7 மாத குழந்தை
மதுரை மாவட்டம், மாடக்குளம் பகுதியை சேர்ந்தவர் சேதுபதி. இவரது மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதிக்கு காந்த 7 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நிலையில், அக்டோபர் 27, 2025 அன்று விஜயலட்சுமி குழந்தையை கட்டிலில் தூங்க வைத்துவிட்டு சமையல் அறைக்கு வேலை செய்ய சென்றுள்ளார். இதற்கு இடையே அவர், கட்டிலுக்கு அருகே குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டர் மூலம் தண்ணீரை கொதிக்கவைத்துவிட்டு சென்றுள்ளார்.
இதையும் படிங்க : சென்னையில் நள்ளிரவில் மர்ம கும்பல் வெறிச்செயல்.. சாலையில் சென்ற 10 பேருக்கு அரிவாள் வெட்டு!




கொதிக்கும் தண்ணீரில் விழுந்து பலியான பச்சிளம் குழந்தை
இந்த நிலையில், கட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்த குழந்தை தவறி கொதிக்கும் சுடு தண்ணீரில் விழுந்துள்ளது. இதன் காரணமாக குழந்தை அலறி துடித்த நிலையில், அங்கு சென்று பார்த்த தாய் கத்தி கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க : காணாமல் போன இளம் பெண் – காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு – திருச்சி அருகே பரபரப்பு
சிகிச்சை பலனின்றி பலியான குழந்தை
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் அந்த குழந்தை பரிதாபமாக பலியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த குழந்தையின் தாயிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்து வெறும் 7 மாதங்களே ஆன பெண் குழந்தை கொதிக்கும் தண்ணீரில் விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.