Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காணாமல் போன இளம் பெண் – காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு – திருச்சி அருகே பரபரப்பு

Trichy woman murder mystery : திருச்சி அருகே வேலை தேடி சென்ற இளம் பெண் காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காணாமல் போன இளம் பெண் – காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு – திருச்சி அருகே பரபரப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 31 Oct 2025 20:59 PM IST

திருச்சி, அக்டோபர் 31 : திருச்சி (Trichy) மாவட்டத்தில் வேலை தேடி சென்ற இளம்பெண் காணாமல்போன நிலையில், எரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இளம் பெண்ணின் உடலை கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக அருகில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர், இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில்,  போலீசார்  (Police) இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல் போன இளம்பெண் எரிந்த நிலையில் சடமாக கிடைந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

காணாமல் போன இளம்பெண் சடலமாக மீட்பு

திருச்சி மாவட்டம் ஸ்ரீநிவாசநகர் பகுதியில் வசித்து வந்தவர் மீரா ஜாஸ்மின்.  இவர் கடந்த ஏப்ரல், 2025ல் தனது கல்லூரி படிப்பை முடித்த அவர், தற்போது வேலை தேடி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த அக்டோபர் 30, 2025 அன்று வேலை ஒன்றின் நேர்முகத் தேர்வுக்காக வெளியே செல்வதாக தனது வீட்டில் சொல்லி சென்றிருக்கிறார். ஆனால் அவர் இரவு வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் கவலையடைந்த மீரா ஜாஸ்மினின் பெற்றோர் திருச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையும் படிக்க : பைக்கில் சரவெடி வெடித்து வீலிங் செய்து அட்டகாசம்.. 4 இளைஞர்கள் அதிரடி கைது!

அவரது பெற்றோர் புகாரின் பேரில், போலீசார் மீரா ஜாஸ்மின் மொபைல் போன் டவரின் அடிப்படையில், அவரது இருப்பிடத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, எம்.ஆர்.பாளையம் அருகிலுள்ள பாதுகாக்கப்பட்ட காட்டு பகுதியில் அவரது மொபைல் சிக்னல் பதிவாகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த இடத்துக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் 31, 2025 அன்று காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல் இருப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் பெண்ணின் உடலை மீட்டு ஆய்வுக்கு அனுப்பினர். ஆய்வில் அந்த பெண் மீரா ஜாஸ்மீன் என உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மீரா ஜாஸ்மினின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது பெற்றோர் தனது மகளின் உடலைப் பார்த்து கதறி அழுதது காண்போரை நெகிழச் செய்தது.

இதையும் படிக்க : கணவனை கொன்று கழிவறையில் குழிதோண்டி புதைத்த மனைவி.. பகீர் சம்பவம்!

திட்டமிட்ட கொலையா?

காவல்துறையினர் விசாரணையில், மீரா ஜாஸ்மினை யாரோ கடத்தி கொலை செய்து விட்டு, அவரது உடலில் அடையாளங்களை அழிக்க, எரித்துவிட்டு சென்றிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். அவரது செல்போன் சிக்னல்களை அடிப்படையாக வைத்து அவர் பயணித்த இடங்கள், அவரைக் கடைசியாக பார்க்கவர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவ இடத்துக்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  உடற்கூறாய்வுக்கு பிறகே மீரா ஜாஸ்மின் கொலை செய்யப்பட்ட விதம் குறித்து தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.