Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கடற்கரையில் கரை ஒதுங்கிய 4 பெண்களின் சடலங்கள் – சென்னை அருகே பரபரப்பு

Chennai beach tragedy : சென்னை எண்ணூரில், அக்டோபர் 31, 2025 அன்று ஒரே நேரத்தில் பெண்கள் 4 பெண்களின் சடலங்கள் கரை ஒதுங்கியதால் கடற்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் நான்கு பேரின் உடலையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடற்கரையில் கரை ஒதுங்கிய 4 பெண்களின் சடலங்கள் – சென்னை அருகே பரபரப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 31 Oct 2025 18:25 PM IST

சென்னை, அக்டோபர் 31 : சென்னை (Chennai) எண்ணூரில், அக்டோபர் 31, 2025 அன்று ஒரே நேரத்தில் பெண்கள் 4 பெண்களின் சடலங்கள் கரை ஒதுங்கியதால் கடற்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த ஒரு மாணவி உட்பட நான்கு பேர் உயிரிழந்து தெரிய வந்தது. கடலில் குளித்த கல்லூரி மாணவி அலையில் சிக்கியதாகவும், அவரை காப்பாற்ற முயற்சிக்கும்போது மற்ற 3 மாணவிகளும் அலையில் சிக்கியதாக பரபரப்பு ஏற்பட்டது. இறந்த 4 பேரில் ஒருவர் இலங்கை (Srilanka) அகதிகள் முகாமை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடற்கரையில் குளிக்க வந்த 4 மாணவிகள் பரிதாபமாக பலி

சென்னை எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரைக்கு அக்டோபர் 31, 2025 அன்று 4 கல்லூரி மாணவிகள் வந்துள்ளனர்.  இந்த நிலையில் அவர்கள் கடலில் நீராடியும், மகிழ்ச்சியாக ஆடிப்பாடியும் மகிழ்ச்சியாக இருந்ததாக கூறப்படுகிறது.  அந்த நேரத்தில், கடலில் அலைகள் திடீரென அதிகமாக இருந்திருக்கிறது. அவர்களில் ஒருவர் நீரில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார். இதைப் பார்த்த மற்ற மூவர், தங்கள் தோழியை காப்பாற்ற கடலுக்குள் சென்றிருக்கின்றனர்.  ஆனால், எதிர்பாராத விதமாக அவர்களும் கடலில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : பைக்கில் சரவெடி வெடித்து வீலிங் செய்து அட்டகாசம்.. 4 இளைஞர்கள் அதிரடி கைது!

இந்த நிலையில் அவர்களது உடல் சில மணி நேரத்தில் கரையில் சடலமாக ஒதுங்கியிருக்கிறது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக எண்ணுார் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.  தகவல் கிடைத்ததும், எண்ணூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, 4 பேரின் உடலையும் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடற்கரையில் குளிக்க மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க : கணவனை கொன்று கழிவறையில் குழிதோண்டி புதைத்த மனைவி.. பகீர் சம்பவம்!

உயிரிழந்த மாணவிகள் யார்?

பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் ஷாலினி, தேவகி, காயத்ரி, பவானி என அடையாளம் காணப்பட்டனர். உயிரிழந்த நால்வரும் கல்லூரி மாணவிகள் எனத் தெரியவந்துள்ளது. நான்கு பேரில் ஒருவர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. மேலும் 3 பேரும் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.