Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – என்ன காரணம் தெரியுமா?

School holiday : மோன்தா புயல் காரணமாக கடந்த அக்டோபர் 28, 2025 அன்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதனை ஈடு செய்ய நவம்பர் 1, 2025 அன்று பள்ளிகள் செயல்படும் என கூறப்பட்ட நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – என்ன காரணம் தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 31 Oct 2025 15:02 PM IST

மோன்தா புயல் (Montha Cyclone) காரணமாக கடந்த அக்டோபர் 28, 2025 அன்று செவ்வாய் கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை (Holiday) அளிக்கப்பட்டது. அந்த விடுமுறையை ஈடு செய்ய நவம்பர் 1, 2025 அன்று பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டது.  இந்த நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நவம்பர் 1 அன்று விடுமுறை என அறிவித்துள்ளது. மோன்தா புயல் தீவிர புயலாக உருவெடுத்த நிலையில், தமிழகத்தின் வட மாவட்டங்களில் கடும் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால் வங்க கடலில் மேற்கு நோக்கி நகர்ந்ததால், ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. தமிழகத்தை பொறுத்தவரை லேசான அளவில் மழை பெய்தது.

சென்னை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

மோன்தா புயல் தீவிர புயலாக உருவெடுத்த நிலையில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாவட்டத்தில் அக்டோபர் 28, 2025 அன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடு செய்யும் வகையில், நவம்பர் 1, 2025 அன்று சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நவம்பர் 1, 2025 அன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ரக்ஷ்மி சித்தார்த் அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க : பைக்கில் சரவெடி வெடித்து வீலிங் செய்து அட்டகாசம்.. 4 இளைஞர்கள் அதிரடி கைது!

மோந்தா புயல் காரணமாக சென்னையில் அக்டோபர் 27, 2025 முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும்  அக்டோபர் 28, 2025 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரெஞ்சு அலெர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.  இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டிருந்தது.

ஆந்திராவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய மோன்தா புயல்

மோன்தா புயலால் சென்னையில் பெரும் பாதிப்பு இல்லை என்றாலும், ஆந்திரா  முழுவதும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. புயலின் தாக்கம் காரணமாக 2 பேர் உயிரிழந்த நிலையில், சுமார் 1.50 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்களில் பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. புயலின் தாக்கம் காரணமாக பல மாவட்டங்களில் மின்சாரம் துண்டிப்பு, போக்குவரத்து பாதிப்பு போன்ற தீவிர பிரச்னைகள் ஏற்பட்டன.

இதையும் படிக்க : உரிமம் பெறாவிட்டால் ரூ.5000 அபராதம் – சென்னையில் நாய், பூனை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து முழுவதும் துண்டிக்கப்பட்டது.  மோந்தா புயல் ஆந்திரா அருகே கடந்த நிலையில், அதன் தாக்கம்  ஒடிசா மற்றும் தெலங்கானா மாநிலங்களிலும் உணரப்பட்டது. அங்கு பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்தது.