Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கரையை கடந்த தீவிர புயல்.. தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. சென்னையில் எப்படி?

Tamil Nadu Weather Update: கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நல்ல மழை பதிவு இருந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பதிவாகி வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாலுமுக்கு (திருநெல்வேலி) 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

கரையை கடந்த தீவிர புயல்.. தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. சென்னையில் எப்படி?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 29 Oct 2025 14:38 PM IST

வானிலை நிலவரம், அக்டோபர் 29, 2025: நேற்று (28-10-2025) காலை மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய “மோன்தா” தீவிரப்புயல் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திரா – யானம் கடலோரப் பகுதிகளில், மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு தெற்கே, நரசாபூருக்கு அருகில், நேற்று நள்ளிரவு கரையை கடந்து, இன்று (29-10-2025) அதிகாலை, புயலாக வலுக்குறைந்து, இன்று மணி அளவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுக்குறைந்து, ஆந்திர பகுதிகளில் நிலவுகிறது. இது, மேலும் வடக்கு-வடமேக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுக்குறையக்கூடும்.

மேலும், நேற்று (28-10-2025) மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (29-10-2025) காலை அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 36 மணி நேரத்தில் மேலும், வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளை கடந்து நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 10 மாதங்களில் 415 டீனேஜ் பிரசவம்… 59 குழந்தை திருமணங்கள் – தமிழகத்தையே உலுக்கிய வேலூர்

தமிழகத்தில் தொடரும் மிதமான மழை:

29 அக்டோபர் 2025 மற்றும் 30 அக்டோபர் 2025 ஆகிய இரண்டு நாட்களில் தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில், வரவிருக்கும் நவம்பர் 4, 2025 வரை தமிழகத்தின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நல்ல மழை பதிவு இருந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பதிவாகி வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாலுமுக்கு (திருநெல்வேலி) 7, அவலாஞ்சி (நீலகிரி) 6, ஊத்து (திருநெல்வேலி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) தலா 5, காக்காச்சி (திருநெல்வேலி), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), மாஞ்சோலை (திருநெல்வேலி), கூடலூர் பஜார் (நீலகிரி) தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க: தவெக நிர்வாகக் குழுக் கூட்டம்: ஒரு மாதத்திற்கு பின் கட்சி செயல்பாடுகளில் மும்முரம் காட்டும் விஜய்!

சென்னையில் எப்படி இருக்கும்?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான அல்லது லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழைப்பொழிவு இருந்து வரும் நிலையில், வெப்பநிலையின் தாக்கமும் படிப்படியாக குறைந்துள்ளது. ஆனால் இன்று காலை முதல் வெப்பநிலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.