“கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்”-காக தமிழ்நாட்டுக்கு வர முதலீட்டாளர்கள் அச்சம் – எல். முருகன்

Madurai AIIMS: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026ல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது முதல்வர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக மத்திய இணை அமைச்சர் விமர்சித்தார். திமுக அரசு மத்தியத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் திட்டங்களை தாமதப்படுத்துகிறது என குற்றம் சாட்டினார். “கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்” காரணமாக முதலீட்டாளர்களும் வெளியேறுவதாக அவர் தெரிவித்தார்.

“கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்”-காக தமிழ்நாட்டுக்கு வர முதலீட்டாளர்கள் அச்சம் - எல். முருகன்

மத்திய இணை அமைச்சர் எல். முருகன்

Published: 

18 Jun 2025 06:43 AM

 IST

டெல்லி ஜூன் 18: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை (AIIMS Madurai) 2026ம் ஆண்டுக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்பது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு (Chief Minister M.K. Stalin)அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் விமர்சித்துள்ளார். 2021 தேர்தலில் இந்தத் திட்டத்தை தாங்கள் பயன்படுத்திய நிலையில், 2026ல் அதை பயன்படுத்த முடியாது என்பதே அவருக்குப் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா (Union Home Minister Amit Shah) கூறிய ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் இதுவரை பதில் அளிக்கவில்லை. திராவிட முன்னேற்ற கழக அரசு மத்தியத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் திட்டங்களை தாமதப்படுத்துகிறது. நில ஒதுக்கீடு செய்யாமல் இரயில்வே உள்ளிட்ட பல திட்டங்களைத் தடுக்கும் செயலில் உள்ளது. “கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்” கலாச்சாரத்தால் தனியார் முதலீட்டாளர்களும் வெளியேறுவதாகவும், திமுக ஆட்சி மக்கள் நலத்திட்டங்களை தடை செய்கிறது எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

2026ஆம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும் மதுரை எய்ம்ஸ்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட பணிகள் முடிவடைந்து, 2026ஆம் ஆண்டுக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருப்பது, தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலினுக்கு அதிர்ச்சியாக உள்ளது என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மற்றும் பாராளுமன்றத் தொடர்புத் துறை இணை அமைச்சர் தெரிவித்தார். 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இந்தத் திட்டத்தை தங்கள் சாதனையாக சுட்டிக்காட்டிய ஸ்டாலின், இப்போது அந்தத் திட்டத்தை 2026 தேர்தலுக்காக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதாக விமர்சனம் செய்யப்படுகிறது.

மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சனம்

ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து முக ஸ்டாலின் இதுவரை பதிலளிக்கவில்லை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் மதுரையில் தெரிவித்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து முதலமைச்சர் இதுவரை பதிலளிக்கவில்லை எனவும், திமுக அரசு மத்தியத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதால் தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேறாமல் உள்ளன என்றும் அவர் குற்றம்சாட்டினார். குறிப்பாக மதுரை எய்ம்ஸ் உள்ளிட்ட திட்டங்களுக்கு நிலம் ஒதுக்கப்படாததாலே திட்டங்கள் தாமதமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

“கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்” தமிழ்நாட்டுக்கு வர முதலீட்டாளர்கள் அச்சம்

தனியார் முதலீட்டாளர்களும் “கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்” என்ற கலாச்சாரத்தால் பயந்து தமிழகத்தை விட்டு பிற மாநிலங்களுக்கு நகரும் நிலை உருவாகியுள்ளதாகவும், திமுக அரசு மக்கள் நலத்திட்டங்களைத் தடுக்கும் வகையில் செயல்படுவதால் தார்மீக உரிமையை இழந்துவிட்டதாகவும் மத்திய இணை அமைச்சர் விமர்சனம் செய்தார்.

தற்போது திமுக ஆட்சியில் மக்களின் வாழ்வு சிரமமானதாகவும், விரைவில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக மக்களுக்கு வெளிச்சத்தை வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்பார்ப்பை எகிற செய்யும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் டிஸ்குளோசர் டே படம்
மார்பக புற்றுநோய்.. தழும்புகளை முதன்முறையாக வெளிப்படுத்திய ஏஞ்சலினா ஜோலி
பலத்த காற்றால் சாய்ந்த சுதந்திர தேவி சிலை - பிரேசிலில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்
கைலாச மலை – யாரும் ஏற முடியாத தீராத மர்மம்