Chennai Day 2025: பிரிக்க முடியாத பிணைப்பு.. சென்னைக்கு வயசு 386..!
சென்னையின் 386வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அதன் சிறப்புகள் பற்றி தெரிந்துக் கொள்வோம். சேப்பாக்கம் அரண்மனை, விக்டோரியா மஹால் போன்ற வரலாற்று காலக் கட்டடங்கள், மெரினா கடற்கரை, மற்றும் பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் போன்ற சென்னையின் அடையாளங்களாக இன்று வரை திகழ்கின்றன

தமிழ்நாடு, ஆகஸ்ட் 22: தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை இன்று (ஆகஸ்ட் 22) தனது 386வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் பலரும் சென்னை பற்றிய தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். சென்னை இந்த பெயரை கேட்டாலே பிற மாவட்டங்களில் இருப்பவர்களுக்கு ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி உண்டாகும். அங்கு பயணப்படுகிறோம் என்றால் ஏதோ வெளிநாட்டுக்கு செல்வது போன்ற உணர்வு ஏற்படும். அப்படியாக நம்மில் இரண்டற கலந்த, நாம் அதிகம் புழக்கப்படாத ஊராக இருந்தாலும் நம் உணர்வாக இன்றளவும் சென்னை இருக்கிறது. இப்படியான சென்னைக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் பல்வேறு விஷயங்கள் உள்ளது. அது வழிபாட்டு தலமாக இருந்தாலும் சரி, ஆங்கிலேயர் காலத்து கட்டடக்கலையும் சரி, இங்கு வாழும் ஆதிக்குடி மக்களும் சரி எல்லாமுமாக சென்னை செழித்து நிற்கிறது என்பதே உண்மையாகும். அப்படிப்பட்ட சென்னைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைக் காணலாம்.
- சென்னை என்பதும் வெளியூரில் இருப்பவர்களுக்கு நினைவுக்கு வருவது எழும்பூர் ரயில் நிலையம் அல்லது சென்ட்ரல் ரயில் நிலையம் தான். இவைதான் சென்னையின் ரயில் எல்லைகளாக தென் மற்றும் வட மாவட்டங்களுக்கு இருந்து வருகிறது. இப்படியான நிலையில் சென்னையில் இருக்கும் ராயபுரம் ரயில் நிலையம் தான் தென் மாநிலத்தின் முதல் ரயில் நிலையம் என்பது பலரும் அறியாத தகவலாகும். அப்போதைய ஆற்காடு மாவட்டத்திற்கு முதல் ரயில் இங்கிருந்து தான் தொடங்கப்பட்டுள்ளது 1856 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம் நிகழ்கால சாட்சியமாக இன்றளவும் இருந்து கொண்டிருக்கிறது.
- சென்னை சேப்பாக்கம் என்றவுடன் கிரிக்கெட் மைதானம் தான் நினைவுக்கு வரும். ஆனால் இங்கு ஒரு பரந்து விரிந்த அரண்மனை இருந்தது என்பது பலருக்கும் ஆச்சரியமான தகவலாகும். 18 ஆம் நூற்றாண்டில் கர்நாடகா நவாப்பின் கீழ் தமிழ்நாட்டின் சில பகுதிகள் இருந்தன. அவரது தலைநகரம் ஆற்காட்டில் இருந்ததால் அவர் ஆற்காடு நவாப் என மக்களால் அழைக்கப்பட்டார். 1749 ஆம் ஆண்டு ஆற்காடு நவாப்பான முகமது அலி அணையில் ஏறிய போது சேப்பாக்கத்தில் 117 ஏக்கரில் பிரம்மாண்ட அரண்மனை கட்டி முடித்தார். தற்போது அரண்மனையை சுற்றி பொதுப்பணித்துறை கட்டிடம், ஆவண காப்பகம், எழிலகம், வருவாய் துறை கட்டிடம் என வளர்ச்சி அடைந்து விட்டதால் அரண்மனை முற்றிலும் காணாமல் போய்விட்டது.
- மேலும் சென்னையில் புகழ்பெற்ற விக்டோரியா மஹால், செயின்ட் ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் பில்டிங் ஆகியோர் ஆங்கிலேயர் காலத்திற்கு அடையாளமாக திகழும் காலத்தால் அழிக்க முடியாத சின்னமாக உள்ளது.
Also Read: இனி கன்னியாகுமரியில் படகு சவாரிக்கு ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணலாம் – எப்படி செய்வது?




- வங்கக்கடலில் அமைந்திருக்கும் மெரினா கடற்கரை இந்தியாவின் மிக நீண்ட, உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை என பெயர் பெற்றது. சென்னை வரும் வெளியூர் மக்கள் மெரினா பீச் செல்லாமல் வீடு திரும்புவதில்லை.
- அதேபோல் வடபழனி முருகன், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, பாடிகாட் முனீஸ்வரர், மயிலாப்பூர் கபாலீஸ்வரர், ஆயிரம் விளக்கு மசூதி, சாந்தோம் சர்ச் என பல்வேறு வழிபாட்டு தலங்களும் தமிழ்நாட்டின் கடைக்கோடி வரை புகழ்பெற்ற ஒன்றாக உள்ளது.
- ஒருகாலத்தில் பரந்து விரிந்த சென்னை இன்று நிர்வாக வசதிக்காக பல்வேறு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு அதன் எல்லைகளை சுருக்கிக் கொண்டது. இருந்தாலும் செங்கல்பட்டு தாண்டியது நம்மில் பலரும் சென்னை வந்துவிட்டதாகவே இன்றளவும் சொல்லும் அளவுக்கு நம் எண்ணத்தில் மாற்றமில்லை.
- இன்று மின்சார ரயில் சேவை, மெட்ரோ ரயில்கள் என பல விஷயங்கள் வந்து விட்டாலும் சுதந்திர காலக்கட்டத்தில் இங்கு ட்ராம் வண்டிகள் ஓடிக்கொண்டிருந்தது என்பது ஆச்சர்யமான விஷயம் தான்.அதேபோல் சென்னையின் கருப்பு புள்ளியாக இன்று பார்க்கப்படும் கூவம் நதியும் ஒரு காலத்தில் மக்கள் பயன்பாட்டில் இருந்த ஜீவ நதி தான். இதனை சரி செய்ய பல கோடி ரூபாய் ஒதுக்கியும் அதில் மாற்றம் என்பது துளி கூட இல்லை. ம்
- குறிப்பாக சென்னை என்ற பெயர் குறிப்பிட்ட சில தசாப்தங்களுக்கு முன்பு தான் வந்தது. ஆனால் 386 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊர் மதராஸ் மாகாணம் என அழைக்கப்பட்டு வந்தது. ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியை தொடங்குவதற்காக பிரான்சிஸ் டே என்பவர் தற்போது புனித சார்ஜ் போட்டு இருக்கும் நிலத்தை சென்னப்ப நாயக்கர் என்பவரின் மகனான வெங்கடப்ப நாயக்கர் இடம் இருந்து எழுதி வாங்கினார் அப்போது வேங்கடப்ப நாயக்கர் தனது தந்தையின் பெயரான சென்னப்ப நாயக்கர் பெயரை வைக்க வேண்டும் என கோரிக்கை எடுப்ப அதனை ஏற்று மதராஸ் மாகாணம் என்ற இருந்தது சென்னை பட்டணமாக மாற்றப்பட்டது.
Also Read: தமிழகத்தில் இத்தனையா? கலாச்சார, ஆன்மீக, இயற்கை அழகின் சங்கமம்..!
- சென்னையின் சிறப்பு என எடுத்துக் கொண்டால் இங்கு பூர்வ குடிமக்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் கடை கோடி வரை இந்தியாவின் கடைசி எல்லை வரை உள்ள ஊர்களில் பிறந்தவர்கள் கூட தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர் வாழ்வாதம் செய்து வருகின்றனர். எப்படி வீட்டில் ஒரு தாய் தன் மகனை வளர்ப்பாளோ, அதே போல் சென்னை பல்வேறு தரப்பட்ட மக்களின் வளர்ச்சியிலும் ஒரு தாயாக இருந்து நமக்கு கை கொடுக்கிறது.
- என்னதான் சென்னையில் பலவிதமான வசதிகள் இருந்தாலும் சில குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக மழைக்காலம் வந்துவிட்டால் சென்னை ஸ்தம்பித்துவிடும் அளவிற்கு வெள்ளம் தேங்குகிறது. அதேபோல் பல்வேறு வசதிகள் கொண்டு வரும்போது நகரின் எல்லை பரப்பும் சுருங்கிக் கொண்டே வருகிறது. கால ஓட்டத்தில் சென்னை இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் நிழலாக நம்முடன் ஒன்று சேர்ந்து விட்ட சென்னையை எப்போது பிரிக்க முடியாது என்பதே உண்மையாகும்.