TVK Madurai Conference: மகளிர் ஊக்கத்தொகை முதல் தூய்மை பணியாளர்கள் வரை.. தமிழக அமைச்சர்களை சாடிய நிர்மல் குமார்!
Tamilaga Vettri Kazhagam's 2nd State Conference: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை அருகே பாரபத்தியில் நடைபெற்றது. துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், திமுக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து, 2026 தேர்தலில் விஜய் முதலமைச்சராகும்போது மக்களுக்கு நல்லாட்கள் வரும் எனத் தெரிவித்தார். திமுக அமைச்சர்களின் செயல்பாடுகளையும் அவர் விமர்சித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam) 2வது மாநில மாநாடு இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 21ம் தேதி மதுரையை அடுத்த பாரபத்தியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு தொடங்கியதும் முதல் நிகழ்ச்சி நிரலாக தவெக கட்சியின் பாடல் வெளியிடப்பட்டது. இதில், ஒரு சில வரிகளை அக்கட்சியின் தலைவர் விஜய் (TVK Vijay) பாடியிருந்தார். இந்த பாடல் வெளியீட்டை தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் தனது தொண்டர்கள் முன்னிலையில் ரேம்ப் வாக் செய்தார். இதன் தொடர்ச்சியாக தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், துணை பொதுச்செயலாளர்களான நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் பேசினோர்.
அமைச்சர்களை தாக்கி பேசிய நிர்மல் குமார்:
தமிழக வெற்றிக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் பேசுகையில், “தமிழ்நாட்டில் திமுக கட்சி இதுவரை நான்கரை ஆண்டுகள் காட்டாட்சியை முடித்து விட்டது. விவசாயிகள், அரசு ஊழியர்கள் முதல் இன்றைக்கு தூய்மை பணியாளர்கள் என அனைத்து மக்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசால் நேரடியாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இப்போது, என்னிடம் இருக்கும் ஒரே கேள்வி இதுதான், இன்னும் எத்தனை நாட்களுக்குதான் மக்களாகிய நாம் புலம்பி கொண்டே இருக்க போகிறோம். இதற்கு, ஒரு பதில் வேண்டாமா..?
ALSO READ: மதுரை தவெக மாநாட்டில் நடிகர் அஜித்தின் கட் அவுட்- வைரலாகும் போட்டோ




வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நமக்கெல்லாம் ஒரு விடிவு காலம் வேண்டுமென்றால், தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்கும்போது நடக்கும். என்னிடம் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். தமிழக வெற்றிக் கழகத்தில் சீனியர்கள் இல்லையே, எப்படி ஆட்சி செய்வீர்கள், நிர்வாகத்தை நடத்துவீர்கள் என்று கேள்விகளாக எழுப்புகிறார்கள். ” என்றார்.
அமைச்சர்களை சீண்டிய நிர்மல் குமார்:
தொடர்ந்து பேசிய அவர், “திமுகவில் இருக்கும் சீனியர் அமைச்சர்கள் யார்..? கலைஞர் மகளிர் திட்டத்தில் கொடுக்கப்படும் ரூ.1,000 ஐ கொச்சையாக பேசிய அமைச்சர் துரைமுருகன் சீனியரா..? சென்னை மாநகராட்சியில் அட்டூழியம் செய்து அழிக்கும் அமைச்சர் சேகர் பாபு சீனியரா..? தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு துறையின் ஊழல் செய்து கொண்டிருக்கும் மதுரை மண்ணை சேர்ந்த மூர்த்தி சீனியரா..? திராவிட கட்சிகள் கடந்த 30, 40 ஆண்டுகள் இந்த தமிழ்நாட்டை கொள்ளையடித்தது போதாதா..? வருகின்ற 2026 சட்டமன்றத்தில் ஆட்சி அமைத்து இந்த கூட்டத்தில் ஒரு அண்ணன், அக்கா, தம்பி, தங்கையை அமைச்சராக தேர்ந்தெடுப்பார். இந்த நபர் அமைச்சராக தலைமை செயலகத்தில் அமர்ந்து ஒவ்வொரு நொடியும் மக்களை பற்றி சிந்திப்பார்கள்.
ALSO READ: த.வெ.க கொடியை தலையில் கட்டி ரேம்ப் வாக்கில் விஜய்.. ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள் கூட்டம்..
நமது தலைவர் விஜய் அமைச்சராக தேர்ந்தெடுக்கும் நபர், தனது அமைச்சரவையை பற்றி 3 வாரத்தில் தெரிந்து கொள்வார்கள். 4வது வாரத்தில் என்ன செயல்திட்டத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள்.” என்று தெரிவித்தார்.