தவெக மாநாடு.. வெளியாகும் புதிய பாடல்.. மதுரையில் கடும் போக்குவரத்து நெரிசல்
TVK Madurai Conference : மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதியான இன்று நடைபெற உள்ளது. இதனால், மாநாட்டு திடலில் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டுள்ளனர். இதனால், மதுரையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மதுரை, ஆகஸ்ட் 21 : மதுரை பாரப்பத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில (TVK Madurai Conference) மாநாடு, 2025 ஆக்ஸட் 21ஆம் தேதியான இன்று மாலை நடைபெற உள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விஜய் தலைமையில் நடைபெறும் மாநாடு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தொண்டர்கள், ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. mந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரவு முதலே தொண்டர்கள் குவியத் தொடங்கி வருகின்றனர். பெண்கள், இளைஞர்கள் என பலரும் வருகை தந்து வருகின்றனர். குறிப்பாக, பேருந்துகள் தொண்டர்கள் மதுரை மாநாட்டிற்கு படையெடுத்து வருகின்றனர்.
தவெக மாநாடு ஏற்பாடுகள்
மாநாட்டிற்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொண்டர்களுக்கான குடிநீர், உணவு, கழிவறை, மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தொண்டர்களுக்கு சாப்பாடுகள் தயார்ப்படுத்தப்பட்டு வருகிறது. சைவம், அசைவ உணவுகள் என தொண்டர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும், தவெக மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றி பவன்சர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
Also Read : தவெக மாநாடு.. களைகட்டிய மதுரை.. குவியும் தொண்டர்கள்!




மேலும், காவல்துறை சார்பில் 3,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பெண் பவன்சர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மாநாட்டு திடலில் 200க்கும் மேற்பட்ட உயர் மின் கோபுர விளக்குகள் பொருத்தப்பட்டுளளன. விசாலமான பார்க்கிங் வசதி, திடலின் பல்வேறு இடங்களில் கழிவறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், விஜய் ராப் வால்க் செய்யும் வகையில், 300 மீட்டர் அளவில் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தவெக மாநாட்டையொட்டி, திருமங்கலம் – மாட்டுத்தாவணி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
முன்கூட்டியே தொடங்கும் மாநாடு
தமிழகத்தில் கடந்த சில நாட்ளாக வெயிலின் தாக்கம் இருக்கிறது. அதன்படி, மதுரையில் இன்று வெயில் கொளுத்தி எடுக்கிறது. கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் தொண்டர்கள் மாநாடுக்கு படையெடுத்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மாநாடு திடலில் அமர்ந்திருக்கின்றனர். இதனால், பலருக்கு மயக்க நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், முன்கூட்டியே மாநாட்டை தொடங்க தவெக தலைமை திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதோடு இல்லாமல், தவெக தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த், கட்சியின் மேலாண்மை குழு பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா மட்டும் பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Also Read : த.வெ.க மாநாடு.. மதுரை சென்றடைந்த தலைவர் விஜய்.. திடலில் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு..
வெளியாகும் தவெக புதிய பாடல்
இந்த மாநாட்டில் தவெகவின் புதிய பாடல் வெளியாக உள்ளதாக தெரிகிறது. முன்னதாக, மாநாட்டு திடலில் வாகை சூடும் வரலாறு திரும்புகிறது என்று குறிப்பட்டு முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் படங்களுக்கு நடுவில் தவெக தலைவர் விஜய் இருக்கும் பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அதன் அடிப்படையிலேயே புதிய பாடல் ஒன்று வெளியாக உள்ளதாக தெரிகிறது. மேலும், இந்த பாடலில் விஜயின் பேச்சை ஒட்டிய வரிகளும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டில் விஜய் தனது சுற்றுப் பயணம் குறித்த அறிவிப்புகளையும் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.