தவெக மாநாடு.. விஜய் – விஜயகாந்த் பேனர் வைத்த தொண்டர்கள்.. பிரேமலதா என்ன சொல்லுவாரோ?
TVK Madurai Conference : தமிழக வெற்றிக் கழகம் இரண்டாவது மாநில மாநாடு 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், முழுவீச்சில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கிடையில், மாநாட்டையொட்டி, மதுரையில் விஜய்காந்த் - விஜய் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விஜயகாந்த் படத்தை பயன்படுத்தக் கூடாது என பிரேமலதா அறிவித்திருந்தார்.

மதுரை, ஆகஸ்ட் 19 : மதுரையில் 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக மாநாடு (TVK Madurai Conference) நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கிட்டதட்ட முடிவடைந்துவிட்டது. இந்த மாநாட்டையொட்டி, மதுரை நகரம் முழுவதும் ஆங்காங்கே போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில், விஜய் – விஜயகாந்த் படங்களுடன் மதுரையில் தவெக மாநாட்டிற்கு தொண்டர்கள் பேனர் வைத்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த புகைப்படத்தை அரசியல் கட்சிகள் பயன்படுத்த கூடாது என தேமுதிக பொதுச் செயலளார் பிரேமலதா விஜயகாந்த் உத்தரவிட்டிருந்த நிலையில், அதனை மீறி தவெக தொண்டர்கள் விஜயகாந்த் படத்தை பயன்படுத்தியுள்ளனர். இதனால், அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தவெக மாநாடு
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி மாலை நடைபெற உள்ளது. 506 ஏக்கர் நிலத்தில் மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. மாநாடு மேடை, அலங்காரம், இருக்கைகள், மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேடையில் இருந்து விஜய் தொண்டர்கள் மத்தியில் நடத்தும் செல்லும் வகையில் 300 மீட்டருக்கு மேடை அமைக்கப்பட்டுள்ளது. 1000 அடி நீளத்தில் தனி மேடை அமைக்கப்பட்டுள்ளது.
4 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநாடு முழுவதும் 20 ஆயிரம் மின் விளக்குகளும், சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட உள்ளது. குடிநீர் வசதி, மருத்துவ வசதி போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், மாநாட்டு திடலில் பல்வேறு பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, முதல்முறையாக தவெக மாநாட்டில் எம்.ஜி.ஆர், அண்ணா புகைப்படங்கள் தவெக மாநாட்டில் இடம்பெற்றுள்ளது.




Also Read : மதுரையில் தவெக மாநாடு.. முன்னேற்பாடுகள் தீவிரம்.. விஜய் பேசப்போவது என்ன?
விஜய் – விஜயகாந்த் பேனர்
வாகை சூடும் வரலாறு திரும்புகிறது.. 1967, 1977, 2026 உங்க விஜய் நான் வரேன்.. வெற்றி பேரணியில் தமிழ்நாடு எனக் குறிப்பிட்டு எம்ஜிஆர், அண்ணா புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், விஜயுடன் அம்பேத்கர், அஞ்சலை அம்மாள், பெரியார் புகைப்படங்கள் இருப்பது போன்றும் பேனர் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், மதுரையில் தொண்டர்கள் விஜயகாந்த் புகைப்படத்தை பேனராக வைத்துள்ளனர். வைரத்தை இழந்துவிட்டோம்.. தங்கத்தை இழந்து விடமாட்டோம் என குறிப்பிட்டு, விஜயகாந்த் விஜய் படங்களுடன் தொண்டர்கள் பேனர் வைத்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read : த.வெ.க வின் இரண்டாவது மாநில மாநாடு.. 5 குழுக்கள் அறிவித்த தலைமை..
விஜயகாந்த் புகைப்படத்தை எக்காரணம் கொண்டும் எந்த கட்சியும் பயன்படுத்தக் கூடாது என்றும் கூட்டணிக்கு வரும்போது வேண்டுமானாலும் அவரின் படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் அண்மையில் தெரிவித்திருந்தார். இதனை மீறி, தவெக தொண்டர்கள் விஜயகாந்த் படத்தை பயன்படுத்தி உள்ளனர். இதற்கு பிரேமலதா கருத்து தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.