மாறிய கிளைமேட்.. காலையிலேயே சென்னையில் பலத்த மழை.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Chennai Weather Today : காலை முதலே சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. அண்ணா நகர், நுங்கம்பாக்கம், நங்கநல்லூர், வடபழனி, கோடம்பாக்கம், அடையார் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் பலத்த மழை பெய்து வருகிறது. காலை 5 மணி முதல் தற்போது வரை 4 முதல் 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

சென்னை, ஆகஸ்ட் 22 : தலைநகர் சென்னையில் (Chennai Rains) காலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது. இடி, மின்னலுடன் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், 2025 ஆகஸ்ட் 22ஆம் தேதியான இன்று அதிகாலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் லேசான மழை பெய்து வருகிறது. ஆனால், பெரிய அளவில் மழை பொழிவு என்பது இல்லை. சென்னையை பொறுத்தவரை அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஆனால், சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவுகிறது.
சில நாட்களில் வெயில் கொளுத்தி எடுத்து வந்தது. இப்படியான சூழலில், சென்னையில் தற்போது கிளைமேட் மொத்தமாக மாறி இருக்கிறது. அதாவது, தலைநகர் சென்னையில் காலை முதலே இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், 2025 ஆகஸ்ட் 22ஆம் தேதியான இன்று அதிகாலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது. அண்ணா நகர், எழும்பூர், திருவல்லிக்கேணி, வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தி.நகர், ஆலந்தூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து சென்னை முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவு வருகிறது.




Also Read : அடுத்த 5 நாட்களுக்கு அலர்ட்… வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்?
வெதர்மேன் அலர்ட்
KTCC Rain update – The storms in sea are triggering new storms in Chennai City Anna Nagar, Nungambakkam all getting intense spells now. More parts of City can get this early morning rains as new cells are formed inland. pic.twitter.com/5eGlqtaiOw
— Tamil Nadu Weatherman (@praddy06) August 21, 2025
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ தளத்தில் கூறியிருப்பதாவது, ”புதிய புயல் உருவாக வாய்ப்புள்ளது. இதனால், சென்னையில் அண்ணா நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர மழை பெய்ய உள்ளது. வறண்ட நாட்களுக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை தமிழகத்திற்கு வருகிறது. திருக்கலகுன்றம் முதல் ஈசிஆர், மாமல்லபுரம், கல்பாக்கம் வரை இடி, மின்னலுடன் மழை பெய்ய உள்ளது. இன்று முழுவது இதே வானிலை இருக்கக் கூடும்.
Also Read : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. தரைக்காற்று 50 கி.மீ வேகத்தில் வீசும் என எச்சரிக்கை..
முன்னதாக, திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், ஈரோடு, கடலூர் ஆகிய பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது” என குறிப்பிட்டு இருந்தார். அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், காலை 5 மணி முதல் தற்போது வரை நுங்கம்பாக்கம், அடையார் , ராஜா அண்ணாமலைபுரம், வடபழனி ஆகிய இடங்களில் 4-5 செ.மீ மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.