வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. தரைக்காற்று 50 கி.மீ வேகத்தில் வீசும் என எச்சரிக்கை..
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வரும் நிலையில், ஆகஸ்ட் 14, 2025 தேதியான இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம், ஆகஸ்ட் 14, 2025: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி 14 ஆகஸ்ட் 2025 தேதியான இன்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர் பகுதிகளை கடக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் ஆகஸ்ட் 14 2025 தேதியான இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆகஸ்ட் 15 2025 தேதியான நாளை ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தரைக்காற்று மளிகை 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பயணிகளே அலர்ட்… சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. டைமிங் இதுதான்!
கோவையில் பதிவான 5 செ.மீ மழை:
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக லேசான முதல் மிதமான மழை பதிவாகி வருகிறது அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) 5, சோலையார் (கோயம்புத்தூர்), சின்கோனா (கோயம்புத்தூர்) தலா 4, வால்பாறை PTO (கோயம்புத்தூர்), நடுவட்டம் (நீலகிரி), உபாசி TRF AWS (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), பார்வூட் (நீலகிரி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்) தலா 3, மகாபலிபுரம் (செங்கல்பட்டு), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), VIT சென்னை AWS (செங்கல்பட்டு), மேல் கூடலூர் (நீலகிரி), பாலமோர் (கன்னியாகுமரி), கூடலூர் பஜார் (நீலகிரி), தேவாலா (நீலகிரி) தலா செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க: கூலி படம் எப்படி இருக்கு? லோகேஷ் மந்திரம் பலித்ததா? திரை விமர்சனம் இதோ!
மிதமான மழை தொடரும்:
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 16 2025 முதல் ஆகஸ்ட் 20 205 வரை தமிழகத்தில் மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது சென்னை மற்றும் பெருநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது அதிகபட்ச வெப்பநிலை என்பது 35 டிகிரி செல்சியஸ் முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது