AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வழிநெடுகிலும் மக்கள் கூட்டம்.. தாராபுரத்தில் ரோட் ஷோ மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மு.க ஸ்டாலின்..

MK Stalin Campaig: தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதிமுகவில் இருந்து விலகி அக்கட்சியில் இணைந்த சத்தியபாமா வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். திமுக சார்பில் சுகன்யா போட்டியிடுகிறார். சுகன்யாவை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தாராபுரத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

வழிநெடுகிலும் மக்கள் கூட்டம்.. தாராபுரத்தில் ரோட் ஷோ மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மு.க ஸ்டாலின்..
தாராபுரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஸ்டாலின்..
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 02 Oct 2026 12:37 PM IST

அக்டோபர் 2, 2026: தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ரோட் ஷோ மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழகத்தில் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் இடதுசாரிகள் என 5 முனைப் போட்டி நிலவி வருகிறது.

மேலும் படிக்க: “திமுகவின் அந்த முடிவைக் கண்டு அதிர்ந்து போனேன்!”.. ஆவேசமாக விளாசித் தள்ளிய வைகோ!

தாராபுரத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட மு.க ஸ்டாலின்:


தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதிமுகவில் இருந்து விலகி அக்கட்சியில் இணைந்த சத்தியபாமா வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். திமுக சார்பில் சுகன்யா போட்டியிடுகிறார். சுகன்யாவை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தாராபுரத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்ற மு.க.ஸ்டாலின், அங்கிருந்து சாலை மார்க்கமாக தாராபுரம் சென்றடைந்தார். கோவை விமான நிலையத்திலும் அவருக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் படிக்க: “மாநில அரசே இந்தியை திணிக்கிறதா?”.. தவெக அரசை சரமாரியாக வெளுத்து வாங்கிய மு.க.ஸ்டாலின்!

தாராபுரம் அமராவதி சிலை பகுதியில் இருந்து தொடங்கிய மு.க.ஸ்டாலினின் ரோட் ஷோ, பொள்ளாச்சி சாலை மற்றும் பெரிய கடைவீதி வழியாக நடைபெற்றது. சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

பூங்கொத்துகள், புத்தகங்கள் வழங்கி வரவேற்பு:

ரோட் ஷோவின்போது பொதுமக்கள் மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்துகள் மற்றும் புத்தகங்களை வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து, முக்கிய கடைவீதிப் பகுதிகளுக்குச் சென்ற அவர், அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

இடைத்தேர்தலால் அதிகரிக்கும் அரசியல் கவனம்:

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் அரசியல் கட்சிகளிடையே முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தத் தொகுதிகளில் பொதுமக்களின் ஆதரவு யாருக்கு கிடைக்கப் போகிறது என்பது குறித்து அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வருகின்றன.

திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரிகளும் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.  இதனால் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள வாக்குப்பதிவை முன்னிட்டு தாராபுரம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

Follow Us