Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்

Rain Alert : அடுத்த 24 மணிநேரத்தில் தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதன் காரணமாக தமிழ்நாடு 2 நாட்களு்ககு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி..  2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 15 Feb 2026 17:24 PM IST

சென்னை, பிப்வரவரி 15 : தெற்கு வங்கக்கடலின் மைய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட் தகவலின் படி, பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் மேல் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வருகிற பிப்ரவரி 19, 2026 மற்றும் பிப்ரவரி 20, 2026 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே நேரம் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவி வருகிறது.

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி,  பூமத்திய ரேகைக்கு அருகில் இந்தியப் பெருங்கடலம் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

இதையும் படிக்க : ஒரு ‘டீ’ ரூ.1 மட்டுமே.. காதலர் தினத்தில் ருசிகரம்.. 3 நாட்களுக்கு ஆஃபர்.. எங்கு தெரியுமா?

2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு

மேலும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக பிப்ரவரி 15, 2026 இன்று முதல் பிப்ரவரி 18, 2026 புதன்கிழமை வரை தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 19, 2026 அன்று வியாழக்கிழமை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் பிப்ரவரி 20, 2026 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : சென்னையில் ரயில் தண்டவாளத்தை கடத்த முயன்ற 384 பேர் மீது வழக்கு.. பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை!

பனிமூட்டம் எப்படி இருக்கும்?

பனிமூட்டத்தை பொறுத்தவரை பிப்ரவரி 15 முதல் 19, 2026 ஆகிய 5 நாட்கள் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். வெப்ப நிலையை பொறுத்தவரை பிப்ரவரி 15, 2026 முதல் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரும். மேலும் பிப்ரவரி 16 முதல் 18, 2026 வரை அதிகபட்ச வெப்பநிலையில் மாற்றம் இருக்காது. என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.