வீடுகளில் நாய் வளர்க்கிறீர்களா…ரூ.5000 அபராதம்…சென்னை மாநகராட்சியின் புதிய உத்தரவு!

Chennai Corporation Announcement: சென்னையில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு முறையான உரிமம் பெறாத உரிமையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும், இது தொடர்பாக மாநகராட்சி ஊழியர்கள் ஆய்வு மேற்கொள்ள வருவார்கள் என்றும் பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வீடுகளில் நாய் வளர்க்கிறீர்களா...ரூ.5000 அபராதம்...சென்னை மாநகராட்சியின் புதிய உத்தரவு!

சென்னையில் உரிமம் பெறாத வளர்ப்பு நாய்களுக்கு அபராதம்

Published: 

13 Feb 2026 10:28 AM

 IST

தமிழகம் முழுவதும் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாகவும், இதனால் தினந்தோறும் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, தெருநாய்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் முக்கிய இடங்களில் சுற்றி திரிந்து வரும் தெரு நாய்களால் பலதரப்பட்ட மக்கள் பாதிப்படைந்தனர். இதனால், சென்னை மாவட்டத்தில் தெரு நாய்களை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அதன்படி, சென்னை மாநகராட்சி முழுவதும் உள்ள தெரு நாய்கள் கணக்கெடுக்கும் பணி கடந்த 2024- ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்றது, இதில், சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் தெரு நாய்கள் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து, அந்த தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு உத்தரவிடப்பட்டது.

1.47 லட்சம் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி

அதன்படி, சென்னை மாநகராட்சியில் சுமார் 1 லட்சத்து 47 ஆயிரம் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், 16,611 தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதுடன், கருத்தடை சிகிச்சையும் அளிக்கப்பட்டு, அதன் கழுத்தில் மைக்ரோ சிப்பும் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாய்கள் கடித்தும் பொதுமக்கள் பலர் பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர். இதனால், வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சியில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக்கப்பட்டது.

மேலும் படிக்க: மகளிர் உரிமைத் தொகை.. “வங்கிக் கணக்கில் ரூ.5,000 வரவு”.. காலையிலேயே சர்ப்ரைஸ் தந்த முதல்வர் ஸ்டாலின்!!

1 லட்சத்துக்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள்

இதில், சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட நாய்கள் வீடுகளில் வளர்க்கப்பட்டு வருவது தெரியவந்தது. இந்த நாய்களுக்கு முறையான ரேபீஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் எனவும், மைக்ரோ சிப் பொருத்த வேண்டும் எனவும், நாய்களுக்கான உரிமம் பெற வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்த அறிவிப்பை அடுத்து, சென்னை மாநகராட்சியில் வீடுகளில் வளர்க்கப்படும் சுமார் 74 ஆயிரம் நாய்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டும், மைக்ரோ சிப் பொருத்தப்பட்டும், உரிமம் பெற்றும் வளர்க்கப்படுவது தெரியவந்துள்ளது. மீதமுள்ள வளர்ப்பு நாய்களுக்கு முறையான உரிமம் பெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

வளர்ப்பு நாய்களின் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், சென்னை மாநகராட்சியில் வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறாதவர்களின் வீடுகள் தோறும் மாநகராட்சி ஊழியர்கள் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளதுடன், ரூ.5000 அபராதம் விதிக்கப்பட உள்ளது. எனவே, வீடுகளில் நாய் வளர்க்கும் நபர்கள் உடனடியாக அதற்கான உரிமத்தை பெற வேண்டும். மேலும், நாய்களுக்கான ரேபீஸ் தடுப்பூசி செலுத்துவதுடன், அதன் கழுத்தில் மைக்ரோ சிப் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: காதலர் தின ஃபீவர்…ஓசூர் ரோஜா விற்பனை படு ஜோர்…ஒரு பூவின் விலை இவ்வளவா?

அமெரிக்க வெளியிட்ட வரைபடத்தில் இந்தியாவுடன் சேர்க்கப்பட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்
ஆபரேஷன் சிந்தூரின் போது தாக்கப்பட்ட விமான படைத்தளங்களை சீரமைக்கும் பாகிஸ்தான்
ஆவேசம் 2 படம் ரிலீஸ் எப்போது? நடிகர் ஃபஹத் ஃபாசில் கொடுத்த அப்டேட்
ஒரு சக்தி என் உடலுக்குள் நுழைந்தது.. நடிகை சுதா சந்திரன் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்