நாகப்பட்டினம் வரலாறு.. நெதர்லாந்து டூ இந்தியா வரும் சோழர்கால செப்பேடுகள்.. அண்ணாமலை சொன்ன விளக்கம்!
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 21 செப்புப் பட்டயங்களும் காலப்போக்கில் நெதர்லாந்து நாட்டில் உள்ள புகழ்பெற்ற 'லைடன் பல்கலைக்கழகத்தில்' யாரோ கொண்டு போய் வைத்துவிட்டனர். பல ஆண்டுகளாக அங்கேயே முடங்கிக் கிடந்த நமது சரித்திரப் பெருமையை மீட்டெடுக்க பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து போராடினார்.
நெதர்லாந்து நாட்டின் லைடன் பல்கலைக்கழகத்தில் இருந்த சோழர் காலத்து வரலாற்றுச் சிறப்புமிக்க ‘லைடன் செப்புப் பட்டயங்களை’ இந்தியாவிற்கு மீண்டும் கொண்டு வரப் போராடிய பிரதமர் நரேந்திர மோடிக்கு, முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது நெகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இந்த வரலாற்றுச் சான்றுகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மக்களின் நீண்ட நாள் கனவு:
“நாகப்பட்டினம் பகுதி மக்களின் மிக நீண்ட நாள் கோரிக்கையும், ஒரு பெரிய கனவும் என்னவென்றால், இந்த ‘லைடன் செப்புப் பட்டயங்களை’ மீண்டும் நம் நாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான். அங்குள்ள மக்கள் பலரும் தொடர்ந்து இந்த கோரிக்கையை முன்வைத்து வந்தனர். தற்போது அந்த கனவு நனவாகி, இந்த வரலாற்றுச் சான்றுகள் மீண்டும் தாயகம் திரும்புவதை மனமகிழ்வோடு வரவேற்கின்றேன்.
செப்புப் பட்டயத்தில் உள்ள வரலாற்று உண்மை என்ன?
Reminded of the reference to the Nagai (Leiden) Plates during our #EnMannEnMakkal Yatra in Nagapattinam in December 2023.
Today, two years later, our beloved PM Thiru @narendramodi avl is bringing these historic plates back to India, restoring a priceless chapter of Chola… pic.twitter.com/SvHncHUNVI
— K.Annamalai (@annamalai_k) May 16, 2026
இந்த அரிய சாசனம் மொத்தம் 21 செப்புப் பட்டயங்களைக் கொண்டதாகும் (16 செப்புப் பட்டயங்கள் மற்றும் 5 செப்புப் பட்டயங்கள்). இதில் உள்ள 16 செப்புப் பட்டயங்கள் தமிழில் எழுதப்பட்ட மிக முக்கியமான வரலாற்றுப் பதிவாகும். அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்றால், நம்முடைய சோழப் பேரரசு கடல் கடந்து சென்று ‘கடாரம்’ (தற்போதைய மலேசியா/தென்கிழக்கு ஆசியா) மீது போர் தொடுத்து, அங்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வந்த வரலாறு இதில் பதிவாகியுள்ளது.
பௌத்த மன்னனின் வேண்டுகோள்:
சோழர்களின் இந்த வரலாற்று வெற்றிக்குப் பிறகு, அங்கிருந்த ‘சூடாமணி’ என்ற பௌத்த மன்னன் இங்கு வந்து, நாகப்பட்டினம் அருகில் இருக்கும் ‘ஆனைமங்கலம்’ என்ற பகுதியில் தான் ஒரு பௌத்த விகாரத்தைக் (புத்த விஹாரம் / புத்த தியாரம்) கட்டிக் கொள்ள விரும்புவதாக சோழப் பேரரசிடம் கோரிக்கை வைத்தார். பௌத்த மன்னனின் வேண்டுகோளை ஏற்ற சோழப் பேரரசு, இங்கு புத்த விகாரம் கட்டுவதற்கு அனுமதி வழங்கியது மட்டுமல்லாமல், அந்த பௌத்த நிறுவனத்திற்காகப் பராமரிப்புச் செலவுக்காக 26 கிராமங்களின் வருவாயைக் கொடையாக வழங்கியது. இந்த வரலாற்றுப் பெருந்தன்மை மற்றும் உடன்படிக்கை குறித்த அனைத்து விவரங்களும் அந்த 16 செப்புப் பட்டயங்களில் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் மோடியின் போராட்டம்:
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 21 செப்புப் பட்டயங்களும் காலப்போக்கில் நெதர்லாந்து நாட்டில் உள்ள புகழ்பெற்ற ‘லைடன் பல்கலைக்கழகத்தில்’ யாரோ கொண்டு போய் வைத்துவிட்டனர். பல ஆண்டுகளாக அங்கேயே முடங்கிக் கிடந்த நமது சரித்திரப் பெருமையை மீட்டெடுக்க பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து போராடினார். அவரது இடைவிடாத முயற்சியின் காரணமாக, தமிழர்களின் வீரத்தையும், கொடைத் தன்மையையும் உலகிற்கு பறைசாற்றும் இந்தச் செப்புப் பட்டயங்கள் மறுபடியும் இங்கே வரவிருக்கின்றன. நமது முன்னோர்களின் உண்மையான சரித்திரத்தை மீட்டெடுத்த பிரதமருக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றிகள்” என்று அண்ணாமலை பேசியுள்ளார்.