AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வழிக்காட்டி பலகையில் இந்தி மொழி.. இரண்டு அதிகாரிகள் பணியிட நீக்கம் – அரசு அதிரடி..

Hindi Signboard Row: சாத்தான்குளத்தில் வழிகாட்டிப் பலகையில் இந்தி இடம்பெற காரணமாக இருந்த நெடுஞ்சாலைத்துறையின் உதவி கோட்டப் பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகிய 2 பேர் தற்காலிக பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கையும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வழிக்காட்டி பலகையில் இந்தி மொழி.. இரண்டு அதிகாரிகள் பணியிட நீக்கம் – அரசு அதிரடி..
வழிக்காட்டி பலகையில் இந்தி மொழி அகற்றம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 02 Oct 2026 13:31 PM IST

அக்டோபர் 2, 2026: தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராக சாத்தான்குளத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் அமைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில் இந்தி இடம்பெற்ற விவகாரத்தில், 2 நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் தற்காலிக பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் மீது துறைரீதியான விசாரணையும் நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது.

வழிகாட்டிப் பலகையில் இந்தி மொழி:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்–நாசரேத் மாநில நெடுஞ்சாலையில், கருமேனி ஆற்றுப் பாலம் அருகே புதிதாக வழிகாட்டிப் பலகை அமைக்கப்பட்டது. அந்தப் பலகையில் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி, திருநெல்வேலி உள்ளிட்ட ஊர்களின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் இந்தி மொழியிலும் இடம்பெற்றிருந்தன.

தமிழ்நாட்டில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் அமைக்கப்படும் வழிகாட்டிப் பலகைகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இடம்பெறும் நிலையில், சாத்தான்குளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பலகையில் இந்தி இடம்பெற்றது சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க: நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றி வந்த ரவுடி.. அதிரடியாக சுட்டுப்பிடித்த தனிப்படை போலீசார்.. ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு

இந்தி எழுத்துகள் அகற்றம்:


இதுதொடர்பாக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வழிகாட்டிப் பலகையில் இடம்பெற்றிருந்த இந்தி எழுத்துகள் உடனடியாக அகற்றப்பட்டன. இதையடுத்து, இருமொழிக் கொள்கைக்கு எதிராக இந்தி இடம்பெற காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 அதிகாரிகள் பணியிடைநீக்கம்:

வழிகாட்டிப் பலகையில் இந்தி இடம்பெற காரணமாக இருந்த நெடுஞ்சாலைத்துறையின் உதவி கோட்டப் பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகிய 2 பேர் தற்காலிக பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கையும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: “மாநில அரசே இந்தியை திணிக்கிறதா?”.. தவெக அரசை சரமாரியாக வெளுத்து வாங்கிய மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராக அரசு அலுவலர்கள் செயல்படுவது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசியல் ரீதியாகவும் எதிர்ப்பு

சாத்தான்குளம் வழிகாட்டிப் பலகையில் இந்தி இடம்பெற்ற விவகாரம் அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இருமொழிக் கொள்கை தொடர்பான விவாதம் தமிழ்நாட்டில் நீண்டகாலமாக தொடர்ந்து வரும் நிலையில், மாநில நெடுஞ்சாலைத் துறையின் வழிகாட்டிப் பலகையில் இந்தி இடம்பெற்ற சம்பவம் மீண்டும் அந்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us