ஜி.கே. மணியின் கட்சி பொறுப்பு பறிப்பு.. அதிர்ச்சியில் ராமதாஸ்.. பாமகவில் பரபரப்பு
PMK Internal Issue : சட்டப்பேரவையில் பாமகவின் சட்டமன்ற குழு தலைவராக ஜி.கே மணி இருந்தார். இந்த நிலையில், அவரின் கட்சி பொறுப்பை பறித்து, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனை புதிய தலைவராக அன்புமணி நியமித்துள்ளார். இது தொடர்பாக தலைமை செயலரிடம் வழக்கறிஞர் பாலு கடிதம் கொடுத்துள்ளார்.

ஜி.கே. மணி
சென்னை, செப்டம்பர் 25 : பாமகவில் இருந்து ஜி.கே மணியின் பதவியைப் பதித்து கட்சித் தலைவர் அன்புமணி உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் பாமகவின் சட்டமன்ற குழு தலைவராக ஜி.கே மணி இருந்தார். தற்போது அவரின் பதவியை பறித்து, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனை புதிய தலைவராக அன்புமணி நியமித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது பாமகவின் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாமகவில் கடந்த சில மாதங்களாகவே உட்கட்சிப் பூசல் நீடித்து வருகிறது. தனது பேரன் முகுந்தனுக்கு ராமதாஸ் பதவி கொடுத்ததில் இருந்தே அன்புமணி அதிருப்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதன் பிறகு, 2024 லோக்சபா தேர்தலிலும் கூட்டணி விவகாரத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவியதாகவும் தெரிகிறது.
இதனால், ராம்தாஸ் மற்றும் அன்புமணியிலேயே மோதல் போக்கு நிலவி வருகிறது. தனக்கே கட்சியில முழு அதிகாரம் இருப்பதாகவும் ராமதாஸ் கூறி வருகிறார். மேலும், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஒரு அணியாகவும், கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில் ஒரு அணியாகவும் நிர்வாகிகள் இரண்டு குழுக்களாக பிரிந்துள்ளனர். இரு குழுக்களாக பிரிந்து தனித்தனியாக கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அதோடு இல்லாமல் நிர்வாகிகளை அவ்வப்போது நீக்கியும் சேர்த்தும் அன்புமணி மற்றும் ராமதாஸ் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாமகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் கட்சியினர் இடையே அதிர்த்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
Also Read : அன்புமணிக்கு மீண்டும் கெடு… ராமதாஸ் எடுத்த முடிவு.. பாமகவில் புதிய திருப்பம்!
ஜி.கே. மணியின் கட்சி பொறுப்பு பறிப்பு
ராமதாஸ் மற்றும் அன்புமணியை சமாதானப்படுத்த கட்சியின் மூத்த தலைவர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இப்படியான சூழலில், பாமக சட்டமன்ற குழு தலைவராக இருந்த ஜிகே மணியின் பதவியை அன்புமணி பறித்துள்ளார். 2025 செப்டம்பர் 25ஆம் தேதி பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சிவக்குமார், வெங்கடேசன், சதாசிவம் ஆகியோர் பாமக செய்தி தொடர்பாளர் பாலுவுடன் தலைமைச் செயலகம் வந்தனர்.
Also Read : ராமதாஸ் மூத்த மகள் ஸ்ரீகாந்திக்கு கட்சி பதவி.. பா.ம.கவில் அதிரடி டிவிஸ்ட்..
அங்கு சட்டப்பேரவை செயலறை சந்தித்து கடிதம் வழங்கினர். அதில், பாமக சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பில் இருந்து ஜி.கே.மணி நீக்கப்பட்டு, வெங்கடேசனை புதிய தலைவராக நியமிக்க ஒருமனதாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, சேலம் அருளை கட்சியில் இருந்தும கொறடா பொறுப்பில் இருந்தும் நீக்கியதாக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். மேலும், பாமகவின் புதிய கொறடாவாக தேர்வு செய்யப்பட்டுள்ள மயிலும் சிவகுமாரை ஏற்று, ஆவணங்களில் பதிவு செய்து கொள்ளுபடி கடிதம் கொடுக்கப்பட்டதாகவும் பாலு தெரிவித்துள்ளார். இது கடிதம் மீது சபாநாயகர் முடிவு எடுத்து அறிவிப்பார் என கூறியுள்ளார்.