Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னை மக்களே உஷார்.. திறந்துவிடப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி – வெள்ள அபாய எச்சரிக்கை!

Flood Alert : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையின் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரித்த நிலையில், முதற்கட்டமாக வினாடிக்கு 100 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்களே உஷார்.. திறந்துவிடப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி – வெள்ள அபாய எச்சரிக்கை!
செம்பரம்பாக்கம் ஏரி
Karthikeyan S
Karthikeyan S | Published: 21 Oct 2025 18:02 PM IST

வடகிழக்கு பருவமழை  (Northeast Monsoon) துவங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகின்றன. சமீபத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வந்த கனமழை காரணமாக முல்லை பெரியாறு அணை மற்றும் வைகை அணை ஆகியவை முழு கொள்ளலவையும் எட்டியது. இதனால் நீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் தேனி, மதுரை, (Madurai) சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக சென்னைக்கு நீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவையும் எட்டியுள்ளது. இதனையடுத்து குன்றத்தூர் வழிதிலம்பேடு ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.

முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில் வினாடிக்கு 100 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது 24 அடி உயரம் கொண்ட ஏரியில் 20.20 அடி வரை தண்ணீர் நிறம்பியுள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதகரித்து வருகிறது. இதனையடுத்து ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நீர் திறந்து விடப்பட்டுள்ளது.  இதனையடுத்து, குன்றத்தூர், வழிதிலம்பேடு, ராமாபுரம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : சென்னை மக்களே மழைக்கு ரெடியா? அக்டோபர் இறுதி வரை மழை இருக்கும்.. பிரதீப் ஜான் தகவல்..

தமிழக அரசு சார்பில் கனமழையை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கனமழையால் நீர் வரத்து அதிகரித்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் முதல் கட்டமாக வினாடிக்கு 100 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் உருவாகும் சூழல் ஏற்பட்டால் அவர்களை தங்க வைக்க இடம் மற்றும் உணவு தயாரிக்க கூடம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. வெளுக்கப்போகும் மழை..வானிலை ரிப்போர்ட் இதோ..

உருவாகும் புயல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த நிலையில் இது புயலாக மாறுமா என்ற கேள்விக்கு பதிலளித்த சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா, தற்போதைய சூழல்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு ண்டலமாக உருவாக வாய்ப்புள்ளது. அக்டோபர் 21, 2025 நாளை தான் தெரிய வரும் என்றார். இதற்காக தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.