Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நாளை இந்த 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்… தொடர்ந்து 3 நாட்கள் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரி்ககை

Rain Alert : தமிழகத்தில் அக்டோபர் 17, 2025 அன்று இந்த 5 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் அமுதா எச்சரிக்கை விடுத்திருக்கிறார். மேலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியிருக்கிறார்.

நாளை இந்த 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்… தொடர்ந்து 3 நாட்கள் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரி்ககை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 16 Oct 2025 18:42 PM IST

சென்னை, அக்டோபர் 16: தமிழகத்தில் அக்டோபர் 17, 2025 அன்று வடகிழக்கு பருவமழை (Northeast Monsoon) அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இதனால் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை (Heavy Rain) வரை பெய்து வருகிறது. இந்த நிலையில் தெற்கு மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் அமுதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த சில நாட்களில் தொடர்ச்சியாக இரண்டு காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. அவை வலுப்பெற்று, தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் கடலோரங்களில் மழை தீவிரத்தை அதிகரிக்கும் என்றார். அவர் பேசியது குறித்து விவரமாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகறது. இந்த நிலையில் அக்டோபர் 16, 2025 அன்று தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. குறிப்பாக இந்த ஆண்டு தீபாவளியின்போது கனமழை பெய்யும் என தகவல் வெளியானது. இந்த நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் அமுதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் அக்டோபர் 16, 2025 அன்று தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். அதே நேரம், அக்டோபர் 17, 2025 தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றார்.

இதையும் படிக்க : கனமழை எதிரொலி.. 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

அதே போல அக்டோபர் 18, 2025 ஆம் தேதி ராமநாதபுரம்,  புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமாரி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும். அக்டோபர் 19, 2025 அன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது  என்றார்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மேலும் கடல்பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வரை வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் மழை பெய்யும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார். மேலும் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மழை காரணமாக விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 17, 2025 அன்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் விடுமுறை விடப்படலாம் என்று கூறப்படுகிறது.  இதற்கான அரிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

இதையும் படிக்க : அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தொடரும் மழை..

தீபாவளிக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் மக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் திணறி வருகின்றனர். குறிப்பாக சாலையோர வியாரிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.