Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னை மக்களே மழைக்கு ரெடியா? அக்டோபர் இறுதி வரை மழை இருக்கும்.. பிரதீப் ஜான் தகவல்..

Chennai Rains: இன்று சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை பதிவாகியுள்ளதாக வெதர்மேன் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார். அக்டோபர் மாதம் முடிவடையும் நிலையில் தமிழகத்தில் வழக்கத்தை விட அதிக மழைப்பொழிவு இருக்கும் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.

சென்னை மக்களே மழைக்கு ரெடியா? அக்டோபர் இறுதி வரை மழை இருக்கும்.. பிரதீப் ஜான் தகவல்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 18 Oct 2025 15:43 PM IST

வானிலை நிலவரம், அக்டோபர் 18, 2025: காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அக்டோபர் மாதம் இறுதிவரை தினசரி மழை இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சில நேரங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் பின்னர் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பதிவாகி வருகிறது. குறிப்பாக தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு இடையே ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர்:

வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பதிவாகி வருகிறது. சென்னையைப் பொறுத்தவரையில் கடந்த இரண்டு தினங்களாக நகரின் பல பகுதிகளில் இரவும் பகலும் விட்டுவிட்டு மழை பதிவாகி வருகிறது. சில பகுதிகளில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.ஹி

அக்டோபர் மாதம் முழுவதும் மழை இருக்கும் – பிரதீப் ஜான்:


2025 அக்டோபர் 18 ஆம் தேதியான இன்று, நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மட்டும் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம், இன்று சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை பதிவாகியுள்ளதாக வெதர்மேன் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார். அக்டோபர் மாதம் முடிவடையும் நிலையில் தமிழகத்தில் வழக்கத்தை விட அதிக மழைப்பொழிவு இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: அரபிக்கடலில் உருவாகும் புயல்? சென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை.. வெதர்மேன் சொன்னது என்ன?

மேலும், இதுகுறித்து தனது எக்ஸ் (X) வலைதள பதிவில், “2025 அக்டோபர் மாதம் முடியும் வரை தினசரி மழை இருக்கும். அவ்வப்போது மிதமான மழை என தோன்றுவதும் கனமழையாக மாறக்கூடும். கனமழை பொதுவாக இரவு நேரம் முதல் காலை நேரம் வரை வாய்ப்பு அதிகம்,” என தெரிவித்துள்ளார்.