அரபிக்கடலில் உருவாகும் புயல்? சென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை.. வெதர்மேன் சொன்னது என்ன?
Chennai Rains: அரபிக்கடலில் உருவாகக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் கடலோர பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம், அக்டோபர் 18, 2025: சென்னையில் விடிய விடிய பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், அது மெல்ல மெல்ல தீவிரமடைந்தது. இதன் காரணமாக கடந்த ஓரிரு நாட்களாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நல்ல அளவில் மழை பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டி இலட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கச் சுழற்சியின் காரணமாக இன்று, அதாவது அக்டோபர் 18, 2025 அன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் இலட்சத்தீவு பகுதிகள், கேரளா மற்றும் கர்நாடகா கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடரும் கனமழை:
அக்டோபர் 18, 2025 தேதியான இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மட்டும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 19, 2025 நாளும் இதே நிலை நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: எதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது? காவல்துறை என்ன செய்துகொண்டிருந்தது? நீதிமன்றம் கேள்வி
தீபாவளி நாளான அக்டோபர் 20, 2025 அன்று நீலகிரி, கோவை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், 21 அக்டோபர் 2025 அன்று நீலகிரி, கோவை, ஈரோடு, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், நாமக்கல், கரூர் உள்ளிட்ட தொடர்ச்சியான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் விடிய விடிய கொட்டிய மழை – பிரதீப் ஜான்:
Night time clouds strength and move inside Chennai.This is going to be very good rains for Chennai.
Earlier in noon to evening – Northern Chennai and the suburban areas were smashed with heavy rains.
Down south, Kanyakumari, Thenkasi, Nellai, Thoothukudi and Ramanathapuram all… pic.twitter.com/IhsJo4nCC8
— Tamil Nadu Weatherman (@praddy06) October 17, 2025
இது ஒரு பக்கம் இருந்தாலும், அரபிக்கடலில் உருவாகக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் கடலோர பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல… தேர்தல் ஆணையம் அறிவிப்பு – என்ன நடந்தது?
அதே சமயம், மேகக் கூட்டங்கள் நகரை நோக்கி வரும் காரணத்தினால் இரவு முழுவதும் சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் விடிய விடிய இடைவிடாத மழை பதிவாகியது. பகல் நேரத்தில் வடசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் நல்ல அளவில் மழை பதிவாகியதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.