ஈரோடு மக்கள் ஹேப்பி… முதல் அம்ரித் பாரத் ரயில் சேவை தொடக்கம்… டைமிங் இதுதான்!

Amrit Bharat Express : ஈரோடு - பீகார் மாநிலம் ஜோக்பானி இடையே அம்ரித் பாரத் விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய ஏழு மாநிலங்களைக் கடந்து 3,132 கி.மீ. தூரம் செல்கிறது.

ஈரோடு மக்கள் ஹேப்பி...  முதல் அம்ரித் பாரத் ரயில் சேவை தொடக்கம்... டைமிங் இதுதான்!

அம்ரித் பாரத் ரயில்

Published: 

26 Sep 2025 14:42 PM

 IST

ஈரோடு, செப்டம்பர் 26 : ஈரோடு – பீகார் மாநிலம் ஜோத்பானிக்கு இடையே அம்ரித் பாரத் ரயில் இயக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் 2025 செப்டம்பர் 25ஆம் தேதியான நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் இயக்கப்படும் முதல் அம்ரித் பாரத் ரயிலாகும். இந்திய ரயில்வே நவீனப்படுத்தும் முயற்சியில் ரயில்வே நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, பல்வேறு புதிய ரயில்களையும் தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தி வருகிறது. இது ரயில் போக்குவரத்தை எளிமையாக்கி வருகிறது. நாட்டிலேயே அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயில் உள்ளது. இந்த ரயில் நாட்டில் அனைத்து பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலுக்கு இணையான வேகம் அம்ரித் பாரத் ரயிலுக்கு உண்டு.  இந்த ரயில் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் செல்லும் தன்மை கொண்டது.

இது ஏசி வசதி இல்லாத ரயிலாகும். இதனால், எழை, எளிய மக்களும், நடுத்தர மக்களும் எளிதாக பயணிக்க முடியும். அம்ரித் பாரத் ரயில் வட மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதல்முறையாக தெற்கு ரயில்வே சார்பில் தமிழகத்தில் அம்ரித் பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ரயில் எண் 16601 அம்ரித் பாரத் ரயில் ஈரோட்டில் இருந்து தொடங்கப்பட்டது. இந்த ரயில் பீகார் மாநிலம் ஜோக்பானி வரை இயக்கப்படுகிறது.

Also Read : இறந்த 45 தெருநாய்களில் 25 நாய்களுக்கு ரேபிஸ் தொற்று உறுதி.. கோயம்புத்தூரில் அதிர்ச்சி!

முதல் அம்ரித் பாரத் ரயில் சேவை தொடக்கம்


தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய ஏழு மாநிலங்களைக் கடந்து 3,132 கி.மீ. தூரம் செல்லும். இந்திய-நேபாள எல்லையில் பீகாரின் அராரியா மாவட்டத்தில் ஜோக்பானி அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் இந்திய எல்லையின் கடைசி பகுதியாகும்.

அம்ரித் பாரத் ரயில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 7 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்பட்டு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 7.30 மணிக்கு ஜோக்பானியில் இருந்து திரும்பும். இந்த ரயில் சேலம், காட்பாடி, பெரம்பூர், விஜயவாடா, நாக்பூர், ஜபல்பூர், பாட்னா மற்றும் கதிஹார் போன்ற 50க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Also Read : அக்டோபர் 3ஆம் தேதியும் விடுமுறை அளிக்க முடிவு? முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு..

இந்த ரயிலில் 8 ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகளில் தலா 80 பெர்த்த்கள் கொண்ட 22 பெட்டிகளும், 11 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் 100 இருக்கைகளும் உள்ளன. இந்த ரயில் ஈரோடு மக்கள் மட்டுமின்றி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள வடமாநிலத்தவர்கள் பெரிதும் உதவும். இந்த ரயில் ஈரோட்டில் இருந்து பீகாருக்கான பயணத்தை எளிதாக்கம்.