அழைக்கும் பாஜக மேலிடம்? டெல்லி செல்லும் இபிஎஸ்.. அதிமுகவில் பரபரப்பு!

Edappadi Palanisamy Delhi Visit : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  2025 செப்டம்பர் 16ஆம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக தனது சுற்றுப் பயணத்தை எடப்பாடி  பழனிசாமி மாற்றியுள்ளார்.   டெல்லி  செல்ல உள்ள நிலையில்,  2025 செப்டம்பர் 17,18ஆம் தேதிகளில் நடக்கும் பரப்புரை திட்டத்தில் அதிமுக தலைமை மாற்றியுள்ளது.

அழைக்கும் பாஜக மேலிடம்? டெல்லி செல்லும் இபிஎஸ்.. அதிமுகவில் பரபரப்பு!

எடப்பாடி பழனிசாமி

Updated On: 

14 Sep 2025 13:10 PM

 IST

சென்னை, செப்டம்பர் 14 : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  (Edappadi Palanisamy) 2025 செப்டம்பர் 16ஆம் தேதி டெல்லி (Edappadi Palanisamy Delhi Visit) செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக தனது சுற்றுப் பயணத்தை எடப்பாடி  பழனிசாமி மாற்றியுள்ளார்.   டெல்லி  செல்ல உள்ள நிலையில்,  2025 செப்டம்பர் 17,18ஆம் தேதிகளில் நடக்கும் பரப்புரை திட்டத்தில் அதிமுக தலைமை மாற்றியுள்ளது. அதிமுகவில் உட்கட்சி பிரச்னை நிலவி வரும் நிலையில்,  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது. இதனால், அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரையில ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில்,  அதிமுகவில் உட்கட்சி பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் எனவும் இதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள வேண்டும் என திட்டவட்டமாக கூறினார். இந்த பணிகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளவில்லை என்றால், அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணிகளை நான் மேற்கொள்வேன் என செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார். இதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்து இருந்தார். இதனை தொடர்ந்து, செங்கோட்டையனை அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து நீக்கினார்.  அதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களையும் அவர் நீக்கினார்.

Also Read :  ’அதிமுக ஆட்சிக்கு வராது.. உதயநிதி சொன்னது உண்மை தான்’ டிடிவி தினகரன் பேட்டி

டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி

மேலும், அதிமுக நிர்வாகிகள் 2,000 பேர் தனது பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்தனர். ஆனால்,   இதற்கு எடப்பாடி பழனிசாமி மவுனம்  காத்து வருகிறது. இதனால், அதிமுகவில் இருநது பிரிந்துள்ள ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோரை எடப்பாடி பழனிசாமி இணைத்துக் கொள்ள மாட்டார் என தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. அதே நேரத்தில், செங்கோட்டையன் விதித்த 10 நாள் கெடு, 2025 செப்டம்பர் 14ஆம் தேதியான நாளையுடன் முடிவடைகிறது.

இதனால், அவரது அடுத்த கட்ட என்ன என்பதை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இப்படியான சூழலில்,  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  2025 செப்டம்பர் 16ஆம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  2025 செப்டம்பர் 16ஆம் தேதி டெல்லி புறப்படுகிறார்.

Also Read : எடப்பாடி பழனிசாமி 100 ஆண்டுகள் மன நலத்துடன் இருக்க வேண்டும் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக மூத்த் தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் டெல்லி சென்ற செங்கோட்டையன் அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து,  தற்போது எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.