Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அதிமுகவை மக்கிய கோட்டையாக மாற்றும் எடப்பாடி பழனிசாமி.. கருணாஸ் கண்டனம்..

Karunas Interview: சிவகங்கை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், “ ஜெயலலிதா மறைந்தாலும் 100 ஆண்டுகள் எஃகுக்கோட்டையாக அதிமுக இருக்கும் எனப் பிறந்தது. ஆனால் தற்போது எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்திலேயே அந்த எஃகு கோட்டை மக்கிய கோட்டையாக மாறியுள்ளது. 2026-லும் திமுக ஆட்சிதான் உருவாகும்” என தெரிவித்துள்ளார்.

அதிமுகவை மக்கிய கோட்டையாக மாற்றும் எடப்பாடி பழனிசாமி.. கருணாஸ் கண்டனம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 09 Sep 2025 10:47 AM IST

சிவகங்கை, செப்டம்பர் 8, 2025: எஃகு கோட்டையாக இருந்த அதிமுகவை மக்கிய கோட்டையாக மாற்றும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டுள்ளதாக கருணாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அதிமுகவின் உட்கட்சி விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அதாவது, அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்து, எடப்பாடி பழனிசாமிக்கு பத்து நாள் கெடு விதித்திருந்தார். ஆனால் அதற்கு அடுத்த நாளே எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் ஸ்ரீனிவாசன், எஸ். பி. வேலுமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை வைத்து அவசர ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். அதன் தொடர்ச்சியாக, செங்கோட்டையன் உட்கட்சி விவகாரத்தை வெளிப்புறத்தில் கூறியதாக தெரிவித்து, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மக்கிய கோட்டையாக அதிமுக:

அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் இருக்கக்கூடிய செங்கோட்டையன் ஆதரவாளர்கள், அதிமுக நிர்வாகிகள் சுமார் 2000 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இது போன்ற சூழலில் அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், சிவகங்கையில் முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவரும் நடிகருமான கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுகவை வழியில் இருந்து யாரும் வந்து அழிக்க தேவையில்லை; அதை எடப்பாடி பழனிசாமியே செய்து முடித்து விடுவார்.

மேலும் படிக்க: சினிமாவை மிஞ்சிய காட்சி.. சீருடையிலேயே காஞ்சிபுரம் டிஸ்பி கைது.. திடீரென தப்பியோட்டம்!

ஜெயலலிதாவின் கனவை படுகுழி தோண்டி புதைக்கக் கூடிய வேலையை எடப்பாடி பழனிசாமி செய்து கொண்டிருக்கிறார். ஜெயலலிதா மறைந்தாலும் 100 ஆண்டுகள் எஃகுக்கோட்டையாக அதிமுக இருக்கும் எனப் பிறந்தது. ஆனால் தற்போது எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்திலேயே அந்த எஃகு கோட்டை மக்கிய கோட்டையாக மாறியுள்ளது. 2026-லும் திமுக ஆட்சிதான் உருவாகும். அப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எங்கு இருக்கிறது என்று கூட அடையாளம் தெரியாமல் போய்விடும். செங்கோட்டையனைப் போலவே அந்தக் கட்சி நல்லதாக இருக்க வேண்டும் என நானும் நினைக்கிறேன்.

மேலும் படிக்க: செப்டம்பர் 11ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

சுயநலமாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி:

எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்தோ, தவழ்ந்து போயோ முதலமைச்சரானார் என்பதெல்லாம் வேறு கதை. கூவத்தூரில் அவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன் என்ன நடந்தது, என்னென்ன வேலைகள் மேற்கொள்ளப்பட்டது என்பதை அரசியல் நாகரீகம் கருதி நான் கூற விரும்பவில்லை. ஜெயலலிதா கட்டிக் காத்த அதிமுகவை அடைந்தால் போதும்; கட்சியின் சொத்துக்களை மட்டும் அடைந்தால் போதும்; அவரது சந்ததியினர்கள் வாழ்வதற்கான சொத்துக்கள் அடைந்தால் போதும் என சுயநலத்திற்காக எடப்பாடி பழனிசாமி பணியாற்றி வருகிறார். எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கையை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

மீண்டும் திமுக ஆட்சி தான்:

முத்துராமலிங்க தேவரின் பெயரை விமான நிலையத்துக்கு வைப்பது தொடர்பாக நான் பலமுறை கோரிக்கை வைத்தும், எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை வைக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கை மக்களை ஏமாற்றும் செயலாகும். எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக கூட்டணியில் அதிமுக இருந்தாலும், உடைந்த கண்ணாடி ஒட்டாது. வரவிருக்கும் 2026 தேர்தலில், எடப்பாடிக்கு வெற்றி என்பது கிடையாது. வாக்குக்கு 2000 ரூபாய் கொடுத்தாலும் வெற்றி கிடைக்காது, 2026 தேர்தலில் திமுக தான் வெற்றி பெரும்” எனக் குறிப்பிட்டு பேசியுள்ளார்.