AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

10th, 11th துணை தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகளை இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம்… எப்படி..?

Supplementary Exam Hall Tickets 2025: தமிழ்நாடு பத்தாம் வகுப்பு மற்றும் +1 துணைத் தேர்வுகளுக்கான அனுமதிச்சீட்டுகள் ஜூன் 25, 2025 முதல் www.dge.tn.gov.in இணையதளத்தில் கிடைக்கும். விண்ணப்ப எண் அல்லது பதிவு எண், பிறந்த தேதி மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு 2025 ஜூன் 26-28 வரை நடைபெறும்.

10th, 11th துணை தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகளை இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம்… எப்படி..?
துணைத் தேர்வு நுழைவுச்சீட்டுImage Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 23 Jun 2025 15:38 PM IST

தமிழ்நாடு ஜூன் 23: பத்தாம் வகுப்பு மற்றும் +1 துணைத் தேர்வுகளுக்கான நுழைவுச்சீட்டுகளை www.dge.tn.gov.in இணையதளத்தில் 2025 ஜூன் 25 முதல் பதிவிறக்கம் செய்யலாம். தேர்வர்கள் விண்ணப்ப எண் அல்லது நிரந்தர பதிவு எண் மற்றும் பிறந்த தேதி மூலம் நுழைவுச்சீட்டை பெறலாம். மேல்நிலை முதலாம் ஆண்டு செய்முறைத் தேர்வு விவரங்களை தேர்வு மைய கண்காணிப்பாளரிடம் பெற வேண்டும். பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு 2025 ஜூன் 26 முதல் 28 வரை நடைபெறும். தேர்வர்கள் பயிற்சி பெற்ற பள்ளிகளிலேயே தேர்வு எழுத வேண்டும். நுழைவுச்சீட்டு இல்லாமல் தேர்வெழுத அனுமதி கிடையாது.

தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இணையதளத்தில் பதிவிறக்கம்

2025-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு (11ம் வகுப்பு) துணைத் தேர்வுகளுக்கான நுழைவுச்சீட்டுகளை தேர்வர்கள் ஜூன் 25 (புதன்கிழமை) பிற்பகல் முதல் இணையதளமான www.dge.tn.gov.in-இல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்யும் முறை

தனித் தேர்வர்கள் மேற்கண்ட இணையதளத்தில் ‘HALL TICKET’ எனும் பத்தனை கிளிக் செய்த பின், “SSLC & HSE FIRST YEAR SUPPLEMENTARY EXAM, JULY 2025 HALL TICKET DOWNLOAD” என்ற தேர்வுப் பகுதியைத் தேர்ந்தெடுத்து, தங்கள் விண்ணப்ப எண் அல்லது நிரந்தர பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

செய்முறைத் தேர்வுகளுக்கான அறிவிப்பு

மேல்நிலை முதலாம் ஆண்டு செய்முறைத் தேர்வு தொடர்பான தகவல்களைக் குறித்த தேர்வர்கள் தங்களது தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரை நேரில் அணுகி அறிய வேண்டும். அதேபோல், பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு 2025 ஜூன் 26 (வியாழக்கிழமை) முதல் ஜூன் 28 (சனிக்கிழமை) வரை, பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளில் நடைபெறும். தேர்வர்கள், எந்தவொரு வகைத் தேர்வையும் நுழைவுச்சீட்டு இல்லாமல் எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதையும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தேர்வுத் தாளவட்டியைக் காண இணையதளத்திற்கு செல்லுங்கள்

துணைத் தேர்வுகளுக்கான முழுமையான தேர்வுக்கால அட்டவணை (Time Table), www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் தேவைக்கேற்ப அதனை பார்வையிட்டு திட்டமிடலாம்.

தமிழ்நாடு பத்தாம் வகுப்பு மற்றும் +1 துணைத் தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு

தமிழ்நாட்டில் 2025ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு (SSLC) மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) துணைத் தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெறுகின்றன. பத்தாம் வகுப்பு தேர்வுகள் 2025 ஜூலை 4ஆம் தேதி முதல் 2025 ஜூலை 10ஆம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளன. தேர்வு நேரம் காலை 10 மணி முதல் 1.15 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், +1 வகுப்புக்கான துணைத் தேர்வுகள் 2025 ஜூலை 4ஆம் தேதி தொடங்கி 2025 ஜூலை 11ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இந்த தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் (நுழைவுச் சீட்டு) வெளியீடு ஜூன் மாத மத்தியில் இணையதளத்தின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மாணவர்கள் 2025 மே 22 முதல் ஜூன் 4ஆம் தேதி வரை இணையவழி விண்ணப்பிக்க முடிந்தது.

Follow Us