AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tamil Nadu Budget 2026: இன்று தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்.. தண்ணீர் இல்லை பேட்சை அணிந்து வர திமுக ப்ளான்..

Tamil Nadu Budget : காவிரி நீர் விவகாரம் தொடர்பாக திமுக தொடர்ந்து அரசை விமர்சித்து வருகிறது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இன்று சட்டப்பேரவைக்கு வருகை தரும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் "தண்ணீர் இல்லை" என்ற வாசகம் இடம்பெற்ற பேட்ச் அணிந்து வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tamil Nadu Budget 2026: இன்று தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்.. தண்ணீர் இல்லை பேட்சை அணிந்து வர திமுக ப்ளான்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 05 Aug 2026 07:07 AM IST

ஆகஸ்ட் 5, 2026: 2026-27ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் முதல் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், எதிர்க்கட்சியான திமுக எம்.எல்.ஏ.க்கள் “தண்ணீர் இல்லை” என்ற வாசகம் இடம்பெற்ற பேட்ச் அணிந்து சட்டப்பேரவைக்கு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் முழுமையான பட்ஜெட் என்பதால், அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்களிடையிலும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

பட்ஜெட்டில் இடம்பெறும் முக்கிய அறிவிப்புகள் என்ன?

தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.  இதற்கிடையில், கடந்த ஜூலை மாதம் முதலமைச்சர் விஜய் துறைவாரியாக அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள், புதிய திட்டங்கள் மற்றும் துறைகள் வாரியான நிதி ஒதுக்கீடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 2026-27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: “தாத்தாவின் சொத்துக்குப் பேரன் உரிமை கொண்டாடலாம்… தமிழ்நாட்டிற்கு அல்ல!”.. உதயநிதியை விமர்சித்த அமைச்சர் செங்கோட்டையன்!!

மேலும், மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது, அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவசப் பயண வசதி, ஆண்களுக்கும் இலவச பேருந்துப் பயண திட்டம், புதிய ரேஷன் கார்டுகள் வழங்குதல் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தண்ணீர் இல்லை பேட்ச் அணிந்து வர திமுக திட்டம்:

இதற்கிடையில், காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கடந்த சில வாரங்களாக திமுக தொடர்ந்து அரசை விமர்சித்து வருகிறது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வருகிறது.

மேலும் படிக்க: சென்னை அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்.. வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன கணிப்பு..

இந்த சூழலில், இன்று சட்டப்பேரவைக்கு வருகை தரும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் “தண்ணீர் இல்லை” என்ற வாசகம் இடம்பெற்ற பேட்ச் அணிந்து வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காவிரி நீர் பிரச்சினையில் தமிழக அரசின் செயல்பாட்டை கண்டிக்கும் வகையிலும், இதுவரை அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது திமுக உறுப்பினர்கள் “வாய் திறங்க சிஎம் சார்” என்ற வாசகம் இடம்பெற்ற பேட்ச் அணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow Us