AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னை அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்.. வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன கணிப்பு..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்.. வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன கணிப்பு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 05 Aug 2026 06:25 AM IST

ஆகஸ்ட் 4, 2026: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மிதமான மழை முதல் கனமழை வரை பதிவாகி வருகிறது. இதன் காரணமாக வெப்பநிலையின் தாக்கம் கணிசமாக குறைந்து காணப்படுகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:

அந்த வகையில், ஆகஸ்ட் 5ஆம் தேதியான இன்று திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், திருச்சி மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

10ஆம் தேதி வரை தொடரும் மழை:

அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் தேனி, கோவை மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் மட்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மற்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறையும் வெப்பநிலை:

அதிகபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில், பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், இயல்பை ஒட்டியே நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக திருச்சியில் 38.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து வேலூரில் 37 டிகிரி, திருத்தணியில் 37 டிகிரி, பரங்கிப்பேட்டையில் 36.2 டிகிரி, மதுரையில் 38 டிகிரி, கரூரில் 36 டிகிரி மற்றும் ஈரோட்டில் 37.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 36.1 டிகிரி செல்சியஸும், மீனம்பாக்கத்தில் 36 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.

ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பு – பிரதீப் ஜான்:


இதற்கிடையில், தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு நல்ல மழை பதிவாகும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார். குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு பரவலான மழை பெய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை, ஒற்றை அர்தத்தில் பேசினேன் – உதயநிதி விளக்கம்

இந்தச் சூழலில், கடந்த இரண்டு நாட்களாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பதிவாகி வருகிறது. இதனால் நீண்ட நாட்களாக நிலவி வந்த வெப்பத்தின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow Us