பொங்கலுக்கு ரூ.3000 ரொக்கம், சிறப்பு பரிசுத் தொகுப்பு வாங்கவில்லையா?.. ஸ்பெஷல் அறிவிப்பு!!

Rs3000 Pongal cash at ration shop: இந்த பொங்கல் ரொக்கத்தொகை மற்றும் சிறப்பு தொகுப்பு வழங்குவதற்கு குடும்ப அட்டை தாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டன. அந்த டோக்கன்களில் எந்த தேதியில் அவர்கள் பொங்கல் பரிசை வந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

பொங்கலுக்கு ரூ.3000 ரொக்கம், சிறப்பு பரிசுத் தொகுப்பு வாங்கவில்லையா?.. ஸ்பெஷல் அறிவிப்பு!!

கோப்புப் புகைப்படம்

Updated On: 

17 Jan 2026 11:18 AM

 IST

சென்னை, ஜனவரி 17: பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3,000 ரொக்க உதவித்தொகையை இதுவரை வாங்காதவர்கள் திங்கட்கிழமை முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பொங்கல் சிறப்பு தொகுப்புடன், ரொக்கப்பணமும் வழங்கப்பட்டது. அந்தவகையில், அரிசி ரேஷன் அட்டையுடைய2,22,91,710 குடும்பங்களுக்கும், இலங்கை தமிழர் குடும்பங்களையும் சேர்த்து, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் தலா ரூ.3,000 ரொக்கமாக வழங்கப்பட்டது. இந்த பொங்கல் நலத்திட்ட விநியோகத்தை கடந்த ஜனவரி 8ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தமிழகம் முழுவதும் டோக்கன் அடிப்படையில் மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

இதையும் படிக்க: காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. இந்த ரூட்ல போக முடியாது.. நோட் பண்ணுங்க..

டோக்கன் முறையில் பொங்கல் தொகுப்பு விநியோகம்:

அதாவது, இந்த பொங்கல் ரொக்கத்தொகை மற்றும் சிறப்பு தொகுப்பு வழங்குவதற்கு குடும்ப அட்டை தாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டன. அந்த டோக்கன்களில் எந்த தேதியில் அவர்கள் பொங்கல் பரிசை வந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன்படி, ஜனவரி 08, 2026 முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டது.

போகிப் பண்டிகையன்று சிறப்பு விநியோகம்:

அந்த வகையில், டோக்கன் தேதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பை இதுவரை வாங்கத் தவறியவர்களுக்கு கடந்த ஜனவரி 14 (போகிப்பண்டிகை) அன்று சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். எனினும், பொங்கல் பண்டிகை முடிந்த பிறகும், சுமார் 90% குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசுத் தொகுப்பும் ரூ.3,000 ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையும் படிக்க: காணும் பொங்கலுங்கு குடும்பத்துடன் வெளியே போறீங்களா.. சென்னை காவல்துறையின் முக்கிய அறிவிப்பு!!

திங்கட்கிழமை பொங்கல் தொகுப்பு பெறலாம்:

இந்நிலையில், மீதமுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3,000 ரொக்க உதவித்தொகை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பொங்கல் சிறப்பு தொகுப்பு, ரொக்கத்தொகை பெறாதவர்கள் அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கழுத்தை அறுத்த சீன மாஞ்சா கயிறு’.. உயிர்தப்பிய மதபோதகர்..
51 ஆண்டுகளுக்கு முன் நடந்த திருட்டு சம்பவம்.. விடுதலை செய்யப்பட்ட நபர்..
பணம் பற்றாக்குறை காரணமாக காப்பீட்டு பிரீமியம் செலுத்த முடியாமல் தவிக்கிறீர்களா? இதை செய்தால் போதும்..
"சொமேட்டோவில் நடக்கும் மோசடி சம்பவங்களை பகிர்ந்த சிஇஓ".. எச்சரிக்கை மக்களே!!