AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வங்கக்கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தமிழகத்தில் எத்தனை நாட்களுக்கு மழை இருக்கும்?

Rainfall Alert: அக்டோபர் 31ஆம் தேதியைப் பொறுத்தவரையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம்.

வங்கக்கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தமிழகத்தில் எத்தனை நாட்களுக்கு மழை இருக்கும்?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 31 Oct 2026 06:25 AM IST

அக்டோபர் 31, 2026: அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று அதே பகுதியில் நிலவி வந்தது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிக்கோபார் தீவுகள், அந்தமான் கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திராவை நோக்கி நகரும்போது வட தமிழகத்தில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் எந்தெந்த நாட்களில் மழை?

அக்டோபர் 31ஆம் தேதியைப் பொறுத்தவரையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 1ஆம் தேதி வடக்கு கடலோர தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: எத்தனை காலத்துக்குதான் பொய் வழக்குகளை எதிர்கொள்ளவது.. எதிர் வழக்குகளை தாக்கல் செய்ய முடிவு.. முன்னாள் அமைச்சர் ரகுபதி ஆவேசம்!

நவம்பர் 2ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதேசமயம், ஏனைய தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 3ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை!

இதற்கிடையில், மழையின் தீவிரம் குறைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்த நிலையில், வரும் நாட்களில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகப் பதிவாகக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ”தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்”: மதுரையில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் உறுதி

சென்னையில் வானிலை எப்படி இருக்கும்?

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். நகரின் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கும் வாய்ப்புள்ளது.

மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow Us