AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னையில் இன்று ‘Zero Tolerance Day’.. போக்குவரத்து விதிகளை மீறினால் வழக்குப்பதிவு! காவல்துறை அதிரடி அறிவிப்பு!

Chennai Zero Tolerance Day: சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் அக்டோபர் 31ஆம் தேதியான இன்று சென்னை பெருநகரம் முழுவதும் ‘Zero Tolerance Day’ கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னையின் அனைத்து முக்கிய மற்றும் பிரதான சாலைகளிலும் சிறப்புத் தணிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

சென்னையில் இன்று ‘Zero Tolerance Day’.. போக்குவரத்து விதிகளை மீறினால் வழக்குப்பதிவு! காவல்துறை அதிரடி அறிவிப்பு!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 31 Oct 2026 07:04 AM IST

அக்டோபர் 31, 2026: சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சென்னை பெருநகரம் முழுவதும் இன்று (அக்டோபர் 31) போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக ‘விதிமீறல்களற்ற நாள்’ (Zero Tolerance Day) கடைப்பிடிக்கப்பட உள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை அறிவித்துள்ளது. சென்னையில் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தி பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு பயணம் மேற்கொள்ளும்போது போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து போக்குவரத்துக் காவல்துறை தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், நான்கு சக்கர வாகனங்களை இயக்குபவர்கள் இருக்கைப் பட்டை அணிய வேண்டும், போக்குவரத்து சிக்னல்களை மதித்து வாகனங்களை இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் இன்று ‘Zero Tolerance Day’

அதன் ஒரு பகுதியாக, சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் அக்டோபர் 31ஆம் தேதியான இன்று சென்னை பெருநகரம் முழுவதும் ‘Zero Tolerance Day’ கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, சென்னையின் அனைத்து முக்கிய மற்றும் பிரதான சாலைகளிலும் சிறப்புத் தணிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. போக்குவரத்து விதிகளை மீறிச் செல்லும் வாகன ஓட்டிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: சென்னை புறநகர் ரயில் பயணிகள் கவனத்திற்கு.. நவ.1 முதல் அமலுக்கு வரும் புதிய ரயில் கால அட்டவணை.. முழு விவரம் இதோ!

விபத்தில்லா பயணத்தை உறுதி செய்ய வேண்டும்

மேலும், பொதுமக்கள் போக்குவரத்து விதிகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும், சிக்னல்களை மதித்து நடக்க வேண்டும், இருசக்கர வாகனங்களில் செல்லும்போது தலைக்கவசம் அணிய வேண்டும், நான்கு சக்கர வாகனங்களில் இருக்கைப் பட்டை அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், அதிவேகமாகவும் ஆபத்தான முறையிலும் வாகனங்களை இயக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், வாகனம் ஓட்டும்போது கைப்பேசிகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

மேலும் படிக்க: வங்கக்கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தமிழகத்தில் எத்தனை நாட்களுக்கு மழை இருக்கும்?

எனவே, பொதுமக்கள் போக்குவரத்துக் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், விபத்தில்லா பயணத்தை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Follow Us