வடமாநிலத் தொழிலாளர்கள் மீதும் தொடரும் வன்முறை.. திமுக தலைவர்களே தூண்டுகோல்.. நயினார் நாகேந்திரன் ஆதங்கம்!
Nayinar Nagendran alleges DMK leaders: பொது வெளியில் வட இந்தியர்களை வடக்கன், பானிபூரி விற்பவன், டேபிள் துடைப்பவன் எனத் திமுக தலைவர்கள் தொடர்ந்து இழிவாகப் இழிவாகப் பேசுவதுதான் இதுபோன்ற குற்றச் சம்பவங்களுக்கான தூண்டுகோல் என்பதை ஆளும் தலைமை இன்னும் உணர்ந்து கொள்ளாதது அறியாமையின் உச்சம்.

நயினார் நாகேந்திரன்
நெல்லை, பிப்ரவரி 07: திமுக ஆட்சியில் வடமாநிலத் தவர்கள் மீதான வன்முறை தொடர்ந்து நடைபெறுவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் விக்ரமசிங்கபுரம் அருகிலுள்ள அடையக்கருங்குளம் பகுதியில் செயல்படும் செங்கல் சூளையில் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தொழிலாளியாக பணியாற்றி வந்துளார். அங்கு பணிபுரியும் சூழலில் அவருக்கு பாலியல் தொல்லை வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்தனர். சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படிக்க : விஜய்க்கு அபராதம் விதித்ததில் எந்த விதமீறலும் இல்லை.. ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்.. உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு:
இந்த வழக்கு விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது பாலியல் தொல்லை தொடர்பான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, தமிழகப் பெண்களுக்கும், தமிழகத்திற்கு வரும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத திமுக ஆட்சி நடந்து வருவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் கண்டனம்:
தமிழகப் பெண்களுக்கும், தமிழகத்திற்கு வரும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத திமுக ஆட்சி!
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே அடையக்கருங்குளத்தில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வரும் வடமாநிலப் பெண் ஒருவருக்கு, சூளைக்குள் வைத்தே பாலியல் வன்கொடுமை கொடுத்த வழக்கில்…
— Nainar Nagenthran (@NainarBJP) February 6, 2026
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது, நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே அடையக்கருங்குளத்தில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வரும் வடமாநிலப் பெண்ணை, சூளைக்குள் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைதாகியிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது.
வரம்பின்றி தொடரும் வன்முறை:
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும், கைதுகளும் நாளுக்குநாள் பெருகி வருகிறதே தவிர, குறைந்தபாடில்லை. அதிலும் குறிப்பாக, வடமாநிலப் பெண்கள் மீதும் வடமாநிலத் தொழிலாளர்கள் மீதும் தொடரும் வன்முறையானது, வரம்பின்றி நீண்டு கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க: அரசியல் கட்சி தலைவருக்கான பிரசார வாகனங்கள் தயார் செய்யும் பணி…என்னென்ன வசதிகள் உள்ளன தெரியுமா!
வடக்கன், பானிபூரி விற்பவன்:
பொது வெளியில் வட இந்தியர்களை வடக்கன், பானிபூரி விற்பவன், டேபிள் துடைப்பவன் எனத் திமுக தலைவர்கள் தொடர்ந்து இழிவாகப் இழிவாகப் பேசுவதுதான் இதுபோன்ற குற்றச் சம்பவங்களுக்கான தூண்டுகோல் என்பதை ஆளும் தலைமை இன்னும் உணர்ந்து கொள்ளாதது அறியாமையின் உச்சம். வேற்றுமையில் ஒற்றுமை யைப் போற்றும் நமது நாட்டில், தமிழகத்தில் மட்டும் மற்ற மாநிலத்தவர்களை மாற்றாந்தாய் மனப்போக் குடன் அணுகும் திமுகவின் பிளவுவாத அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.