பயணிகளே உஷார்.. ஆம்னி பேருந்தில் 43 சவரன் நகை திருட்டு.. டீ குடிக்க இறங்கியபோது சம்பவம்!

Omni Bus Gold Theft : சென்னை தூத்துக்குடி செல்லும் ஆம்னி பேருந்தில் பார்சலில் சென்ற ரூ.35 லட்சம் மதிப்புள்ள 43 சவரன் நகை திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டீ குடிப்பதற்காக பேருந்து நின்றபோது, அப்பேருந்தின் நடத்துனர் நகை கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

பயணிகளே உஷார்.. ஆம்னி பேருந்தில் 43 சவரன் நகை திருட்டு.. டீ குடிக்க இறங்கியபோது சம்பவம்!

மாதிரிப்படம்

Published: 

12 Sep 2025 06:15 AM

 IST

சென்னை, செப்டம்பர் 11 : சென்னை இருந்து தூத்துக்குடி சென்ற ஆம்னி பேருந்தில் பார்சலில் போன 43 சவரன் நகை திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பேருந்தில் இருந்த நடத்துனர் ஒருவர் 43 நகையுடன் தப்பியோடியுள்ளார். டீ குடிப்பதற்காக பேருந்து நிறுத்தப்பட்டபோது, நகையுடன் தப்பியுள்ளது தெரியவந்துள்ளது. சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் ஆம்னி பேருந்துகளில் பயணம் மேற்கொள்கின்றனர். குறிப்பாக, தென் மாவட்ட பயணிகளே அதிகம். மேலும், ஆம்னி பேருந்துகளில் பார்சலும் அனுப்பப்பட்டு வருகிறது.

அப்படிதான், சென்னையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி செல்லும் ஆம்னி பேருந்தில் 43 சவரன் நகை திருடுப்போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உரியவரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட வேண்டிய பஸ் நடத்துனரே நகையுடன் தப்பிச் சென்து தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்ணடி பகுதியைச் சேர்ந்தவர் ஆரிப். இவர் நகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவரது சகோதரர் முகைதீன். இவர் நெல்லையில் நகை கடை நடத்தி வருகிறார். இவர் அவ்வப்போது நெல்லையில் உள்ள சகோதரருக்கு நகைகளை அனுப்பி வந்துள்ளார். இதனை அவர் வாடிக்கையாக வைத்துள்ளார்.

Also Read : மனைவியுடன் வேறுநபர்.. இருவரையும் தலை துண்டித்து கொன்ற கணவர்!

ஆம்னி பேருந்தில் 43 சவரன் நகை திருட்டு

பேருந்தில் பார்சலில் கொண்டு செல்லப்படும் நகையை, காயல்பட்டினத்தில் பேருந்து நின்றபோது, அபுதாஹீர் என்பவர் நகைகளை பெற்றுக் கொண்டு முகைதீனிடம் ஒப்படைப்பார். இப்படியே நடந்து வந்துள்ளது. இந்த நிலையில், 2025 செப்டம்பர் 8ஆம் ததி வழக்கம்போல் 43 சவரன் நகைகளை சகோதரரிடம் ஒப்படைப்பதற்காக ஆம்னி பேருந்தில் அனுப்பியுள்ளார். எப்போது பேருந்து காயல்பட்டினத்தில் நின்று செல்லும்.

அன்று பயணிகள் டிக்கெட் எடுக்காததால், அறுமுகநேரில் பேருந்து நின்றது. அப்போது, ஆம்னி பேருந்து ஓட்டுநர் நகையை வாங்கிக் கொள்ளுமாறு போன் செய்துள்ளார். அதன்பேரில் அந்த நபர் நகையை கேட்டபோது நகை காணாமல் போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியான ஓட்டுநர், அங்குள்ள நடத்துனரிடம் கேட்டபோது, ஒரு கிளீனர் காணாமல் போனது தெரிந்தது. தொடர்ந்து, நடத்துனருக்கு போன் செய்போது அவரது எண் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது.

Also Read : சேலத்தை அதிர வைத்த பெண்.. திண்டுக்கல் வியாபாரிடம் ரூ.10 கோடி மோசடி!

இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், டீ குடிக்க பேருந்தை நிறுத்தியபோது, பார்சலில் வந்த நகையை நடத்துனர் திருடிச் சென்றது தெரியவந்தது. அந்த பார்சலில் 43 சவரன் நகை இருந்தது உறுதியானது. இது தொடர்பாக போலீசார் அந்த நடத்துனரை தேடி வருகின்றனர்.