AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கோவை – மேட்டுப்பாளையம் மெமு ரயில் சேவையில் மாற்றம்.. முக்கிய தகவல்!

Coimbatore - Mettupalayam MEMU Train Service Change | கோயம்புத்தூர் - மேட்டுப்பாளையம் மெமு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக இந்த ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை – மேட்டுப்பாளையம் மெமு ரயில் சேவையில் மாற்றம்.. முக்கிய தகவல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 06 Oct 2026 07:31 AM IST

கோயம்புத்தூர், அக்டோபர் 06 : கோயம்புத்தூர் – மேட்டுப்பாளையம் (Coimbatore – Mettupalayam) மெமு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோயம்புத்தூர் – மேட்டுப்பாளையம் மெமு ரயில் சேவையில் என்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கோயம்புத்தூர் – மேட்டுப்பாளையம் ரயில் சேவையில் மாற்றம்

கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கோயம்புத்தூர் வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சேலம் தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அதில், என்ன கூறப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : திருமண பெண்களுக்கு குட் நியூஸ்.. அண்ணன் சீர் திட்டம்.. அமைச்சர் ஜெகதீஸ்வரி கொடுத்த அப்டேட்!

என்ன என்ன மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது?

மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையம் – கோயம்புத்தூர் மெமு ரயில் நாளை (அக்டோபர் 07, 2026) மற்றும் நாளை மறுநாள், அதாவது அக்டோபர் 08, 2026 ஆகிய இரண்டு நாட்களுக்கிஉ வட கோவை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில், வழக்கமாக கோயம்புத்தூர் ரயில் நிலையம் வரை இயக்கப்படுவது போல தற்போது இயக்கப்படாது.

இதையும் படிங்க : ஜெம் வீரமணி பாலியல் வழக்கு.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. அடுத்தடுத்து 3 பேரை தூக்கிய எஸ்.ஐ.டி. குழு!

2 நாட்களுக்கான முக்கிய ரயில் சேவை மாற்றம்

கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் கோயம்புத்தூர் – மேட்டுப்பாளையம் மெமு ரயில், நாளை மற்றும் நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 07, 2026 மற்றும் அக்டோபர் 08, 2026 ஆகிய தேதிகளில் வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து காலை 11.57 மணிக்கு புறப்படும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த இரண்டு நாட்களில் கோயம்புத்தூர் – வடகோவை இடையே ரயில் இயக்கப்படாது. வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து, மேட்டுப்பாளையம் வரை மட்டுமே ரயில் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us