AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மறைந்த பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை.. முதல்வர் விஜய் அறிவிப்பு!!

State honors for Bharathiraja: தமிழ் சினிமாவின் போக்கையே கிராமத்து மண்வாசனை பக்கமாக திருப்பிய பெருமைக்குரிய இயக்குனர் பாரதிராஜா இன்று காலை மறைந்தார் என்ற தகவல் கிடைத்தது. எனினும், அத்தகவல் அவரது குடும்பத்தினரால் உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது. இதனால், அவரது மறைவுச்செய்தியை வெளியிடுவதில் குழப்பங்கள் நீடித்தன.

மறைந்த பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை.. முதல்வர் விஜய் அறிவிப்பு!!
இயக்குநர் இமையம் பாரதிராஜா
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 10 Jun 2026 10:41 AM IST

தமிழ் திரைப்பட உலகின் வரலாற்றுச் சாதனைகளை படைத்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா (84), வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுச் செய்தி தமிழ் திரையுலகினரையும், உலகெங்கிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இயக்குனர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.. சோகத்தில் திரை உலகினர்..

இரங்கல் செய்தி வெளியிடுவதில் குழப்பம்:

தமிழ் சினிமாவின் போக்கையே கிராமத்து மண்வாசனை பக்கமாக திருப்பிய பெருமைக்குரிய இயக்குனர் பாரதிராஜா இன்று காலை மறைந்தார் என்ற தகவல் கிடைத்தது. எனினும், அத்தகவல் அவரது குடும்பத்தினரால் உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது. இதனால், அவரது மறைவுச்செய்தியை வெளியிடுவதில் குழப்பங்கள் நீடித்தன. மருத்துவமனை தரப்பிலும் அவரது உடல்நிலை குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. எனினும், சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு பிரீஸர் பாக்ஸ் போன்ற பொருட்கள் எடுத்துச்செல்லப்பட்டன. இதனைத்தொடர்ந்து, அவரது மறைவுச் செய்தி உறுதியானது.

முதல்வர் விஜய் நேரில் இரங்கல்:

இதனிடையே, இயக்குநர் இமயம் பாரதிராஜா வீட்டிற்கு முதல் ஆளாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை தந்தார். அவரைத்தொடர்ந்து, பிரபலங்கள் பலரும் அவரது வீட்டிற்கு வந்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில், அதேபகுதியில் வசிக்கும் தமிழக முதலமைச்சர் விஜய் பாரதிராஜான உடலுக்கு நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அன்னாரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார். முதல்வர் விஜய் 3 நாள் பயணமாக டெல்லி செல்ல இருந்த நிலையில், மறைவுச்செய்தி அறிந்து உடனடியாக வந்து தனது அஞ்சலியை செலுத்தினார்.

சொந்த ஊரில் இறுதிச்சடங்கு?

தொடர்ந்து, பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு சென்னையில் நடைபெறுகிறதா? அல்லது அவரது சொந்த ஊரில் நடைபெற உள்ளதா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் எந்தவொரு தகவல்களையும் தற்போது வரை பகிரவில்லை. இதனிடையே, அவருக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும் என பல்வேறு பிரபலங்களும் குரல் கொடுக்கத் தொடங்கினர். இந்நிலையில், அவருக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

முன்னணி நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியவர்:

திரைத்துறையில் எத்தனையோ முன்னணி நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தி, அவர்களை மாபெரும் உயரத்திற்கு கொண்டு சென்ற பெருமை இயக்குனர் இமயம் பாரதிராஜாவையே சேரும். தமிழ் சினிமாவில் எளிய பின்புலம் கொண்டவர்கள் கூட தங்களது திறமையால் கதாநாயகனாகவும், கதாநாயகியாகவும் மிளிர முடியும் என்பதைத் தனது படங்கள் மூலம் நிரூபித்துக் காட்டியவர் அவர். தனது தனித்துவமான இயக்கத்தின் மூலமாக ஒவ்வொரு நடிகர் மற்றும் நடிகைகளின் அணுவணுவான உணர்ச்சிகளையும் செதுக்கி, சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்தவர் பாரதிராஜா. தமிழ் திரையுலகின் இந்த மகத்தான இயக்குனரின் மறைவு ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும் என்று திரை உலகினர் தங்களது வேதனையைப் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிக்க: “என் இனிய தமிழ் மக்களே”.. ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் அரை நூற்றாண்டு கால தமிழ் சினிமாவின் இமயப் பயணம்!!

பிரபலங்கள் நேரில் அஞ்சலி:

பாரதிராஜாவின் மறைவுச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் இயக்குனர்கள் எனப் பலரும் நேரில் வருகை தந்து தங்களது இறுதி அஞ்சலியைச் செலுத்தி வருகிறார்கள்.

Follow Us