AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

துரோகக் கூட்டணி தான் என்டிஏ – மதுரையில் முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தீவிரமடைந்து வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மதுரையில் நடைபெற்ற திமுக பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய ஜனநாயக கூட்டணி மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.

துரோகக் கூட்டணி தான் என்டிஏ – மதுரையில் முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்
மு.க.ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 05 Apr 2026 22:08 PM IST

சென்னை, ஏப்ரல் 05 : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மதுரையில் திமுக கூட்டணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசிய அவர், தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைவது உறுதி என்றார். மேலும் பேசிய அவர், மதுரை அன்புக்கும் விருந்தோம்பலுக்கும் பெயர் பெற்ற நகரம். இரவு நேரத்திலும் உற்சாகமாக இருப்பதால் தான் இது தூங்கா நகரம் என அழைக்கப்படுகிறது என்றார்.

என்டிஏ கூட்டணியை விமர்சித்த மு.க.ஸ்டாலின்

மேலும் பேசிய அவர் திமுக ஆட்சியில் மதுரையில் பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கலைஞர் நூற்றாண்டு நூலகம், மேம்பாலங்கள், ஹாக்கி விளையாட்டு அரங்கம், புணரமைக்கப்பட்ட மதுரை வண்டியூர் பூங்கா போன்ற திட்டங்கள் மூலம் மதுரை வண்டியூர் பூங்கா, போன்ற திட்டங்கள் மூலம் மதுரையில்ன் வளர்ச்சியில் முன்னேற்றம் கண்டுள்ளது. மேலும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்றார்.

இதையும் படிக்க : தேர்தலில் கவனம் பெறும் திருப்பரங்குன்றம் தொகுதி.. மீண்டும் வசமாக்குவாரா வி.வி.ராஜன் செல்லப்பா!

மதுரையில் பேசிய மு.க.ஸ்டாலின்

 

அதனைத் தொடர்ந்து பேசிய அவர் தேசிய ஜனநாயக கூட்டணியை கடுமையாக விமர்சித்த அவர், ஆக்ரா, போபால், பாட்னா போன்ற நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் வழங்கப்பட்ட நிலையில், மதுரை மற்றும் கோயம்புத்தூருக்கு மறுப்பு தெரிவித்தது துரோகம் செய்திருக்கிறது. மேலும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் பல ஆண்டுகளாக அறிவிப்பு அளவில் மட்டுமே இருந்து வருகிறது. இதுவரை நடைமுறைக்கு வரவில்லை என்றார்.

இதையும் படிக்க : நாங்குநேரி தொகுதியை தக்க வைத்துக் கொள்வாரா ரூபி ஆர்.மனோகரன்!

மேலும் பேசிய அவர், கீழடி ஆய்வறிக்கை வெளியீடு தாமதமாகி வருகிறது. தமிழ்நாட்டின் வரலாறு மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்தும் முக்கியமான ஆய்வுகளை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. திராவிட மாடல் அரசு மக்கள் நலன், மத நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சியை முன்னிறுத்துகிறது. அதற்கு மாறகாக என்டிஏ கூட்டணி பிரிவினையை தூண்டி அரசியல் மேற்கொள்கிறது என்று குற்றம்சாட்டினார்.

Follow Us