Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுக ஆட்சியில் பெண்கள் சுதந்திரத்துக்கு உரிய கட்டமைப்பு வழங்கப்படும்…முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!

C M MK Stalin Latest Speech: தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக வாழ திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் உரிய கட்டமைப்புகள் வழங்கப்படும் என்று சென்னையில் நடைபெற்ற உலக மகளிர் உச்சி மாநாட்டில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார் .

திமுக ஆட்சியில் பெண்கள் சுதந்திரத்துக்கு உரிய கட்டமைப்பு வழங்கப்படும்…முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!
பெண்களின் சுதந்திரத்துக்கு உரிய கட்ட்மைப்பு
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 27 Jan 2026 13:54 PM IST

சென்னையில் தமிழக அரசு சார்பில் “உலக மகளிர் உச்சி மாநாடு 2026”- “தமிழ்நாடு மகளிர் வேலை வாய்ப்பு பாதுகாப்பு” திட்ட தொடக்க விழா இன்று செவ்வாய்க்கிழமை ( ஜனவரி 27) நடைபெற்றது. இந்த மாநாட்டை முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது: இந்தியாவில் அதிக அளவு பெண்கள் வேலைக்கு செல்லும் மாநிலமாக தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் வெளி நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் தொழில் தொடங்க முன் வந்தாலும், அதன் மூலம் எத்தனை பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று தான் முதல் கேள்வியை நான் எழுப்புவேன். தமிழகத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் அதிக அளவுக்கு வேலைக்கு செல்ல வேண்டும். தற்போது, பல்வேறு தனியார் நிறுவனங்களில் குறிப்பிட்ட சதவீதம் பெண்கள் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டனர். தமிழகத்தில் புதிதாக வளர்ந்து வரக்கூடிய துறைகளில் பெண்கள் அதிக அளவு இடம்பெற வேண்டும்.

சமூகத்தின் முதுகெலும்பு பெண்கள் தான்

இதற்காகவே, உலக வங்கியின் உதவியுடன் ரூ.182 கோடியில் மகளிர் வேலை வாய்ப்பு பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் விவாதிக்க கூடிய கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான சிந்தனைகள் அனைத்தும் நம்முடைய இலக்கை அடைவதற்கு துணையாக இருக்கும். பெண்கள் தான் சமூகத்தின் முதுகெலும்பு. மக்கள் தொகையில் சரி பாதியாக இருக்கக்கூடிய பெண்கள் முன்னேறாமல் எந்த நாடும் முன்னேற முடியாது.

மேலும் படிக்க: பெரம்பலூரில் ரெளடி மீது என்கவுண்டர் ஏன்? மத்திய மண்டல ஐ.ஜி. பரபரப்பு விளக்கம்!

திமுக ஆட்சியில் பெண்களுக்கு சம பங்களிப்பு

திமுக ஆட்சியில் பெண்களின் சம பங்களிப்பை அதிகரிப்பதற்காக மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம், பெண்கள் பட்டப்படிப்பை படிப்பதை உறுதி செய்யும் வகையில் புதுமைப்பெண் திட்டம், படிக்கும் காலத்தில் மாதம் தோறும் ரூ.1000 உதவி தொகை கிடைப்பதால் கல்லூரிக்கு வருகை தரும் மாணவிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. படித்து முடித்ததும் வேலைகள் கிடைப்பதற்கு நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. வேலைக்கு செல்லும் இடத்தில் பாதுகாப்பாக இருப்பதற்கு தோழிகள் விடுதிகள் திறக்கப்பட்டுள்ளது.

பெண்கள் சுதந்திரத்துக்கு உரிய கட்டமைப்பு

பெண்கள் தலைமை ஏற்று நடத்தும் வகையில் புதிய தொழில் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. 1.30 கோடி பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு ஏற்படும் கருப்பை வாய் புற்றுநோயை தடுப்பதற்கு சிறப்பு தடுப்பூசி வழங்கப்படும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 3.38 லட்சம் பெண் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மார்பக புற்றுநோய் கட்டியை தொடக்கத்திலேயே கண்டறிவதற்கு 38 நடமாடும் மருத்துவர் ஊர்திகள் உள்ளிட்ட மகளிர் நலன் சார்ந்த திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் சுதந்திரமாக வாழ திமுக ஆட்சியில் உரிய கட்டமைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: அமமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ஆதரவாளர் அய்யப்பன்?டிடிவி தினகரனுடன் திடீர் சந்திப்பு…பின்னணி என்ன!