Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இறுதி கட்டத்தை எட்டிய குத்தம்பாக்கம் பேருந்து நிலையம்.. பிப்ரவரி இறுதியில் திறக்க திட்டம்!

Kuthambakkam Bus Terminus Ready To Open | கோயம்பேடில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு போக்குவரத்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கட்டப்பட்டு வந்த குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அது விரைவில் திறக்கப்பட உள்ளது.

இறுதி கட்டத்தை எட்டிய குத்தம்பாக்கம் பேருந்து நிலையம்.. பிப்ரவரி இறுதியில் திறக்க திட்டம்!
குத்தம்பாக்கம் பேருந்து நிலையம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Jan 2026 08:49 AM IST

சென்னை, ஜனவரி 26 : சென்னை மாநகரின் (Chennai Corporation) போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் சுமார் 24.8 ஏக்கர் பரப்பளவில் குத்தம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது பூந்தமல்லி பைபாஸ் மெட்ரோ நிலையத்தில் இருந்து சுமார் 6.5 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 2026 பிப்ரவரி மாத இறுதியில் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மார்ச் மாதத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்தை காலி செய்ய திட்டம்

இந்த குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தின் செயல்பாடுகளை உறுதி செய்யும் வகையில் போக்குவரத்து துறை, கும்டா, சிஎம்டிஏ உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சோதனை ஓட்டங்களை நடத்தின. இதில் பேருந்துகள் குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்து, காஞ்சிபுரம் நோக்கி வெளியேறும்போது யூ – டர்ன் எடுப்பது போன்ற வழித்தடங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இந்த பேருந்து நிலையம் மற்றும் அதன் வழித்தடங்கள் ஆகியவை திட்டமிட்டபடி செயல்படும் பட்சத்தில் 2026, மார்ச் மாத இறுதிக்குள் கோயம்பேடு பேருந்து நிலையம் காலி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : “அதிமுக அரசின் அடையாளம் அடிமைத்தனம்”.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!!

குத்தம்பாக்கம் வரை நீட்டிக்கப்பட உள்ள பேருந்து சேவைகள்

குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு நேரடி இணைப்பு வழங்குவதற்காகவே மெட்ரோ ரயில் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பூந்தமல்லி பைபாஸ் மெட்ரோ நிலையம்  நசரத்பேட்டையில் உள்ள சென்னை வெளிவட்ட சாலை அருகே அமைந்துள்ளது. அதன்படி, பூந்தமல்லி பணிமனையில் முடிவடையும் பேருந்து சேவைகள், மெட்ரோ ரயில் நிலையம் வழியாக குத்தப்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.