போலீஸ் வாகனம் மீது வெடிகுண்டு வீச்சு.. ரவுடி அழகுராஜா என்கவுண்டரில் சுட்டுக்கொலை.. காலையிலேயே பரபரப்பு..
Rowdy encounter this morning: ரவுடி வெள்ளைகாளியை சிறைக்கு அழைத்துச்சென்றபோது, போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசியதில் ரவுடி வெள்ளை காளிக்கு பாதுகாப்பாக வந்த போலீசாரில் மருதுபாண்டி என்பவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் வெள்ளைக்காளி உயிருடன் காப்பாற்றப்பட்டார். இதில், குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
பெரம்பலூர், ஜனவரி 27: பெரம்பலூர் அருகே போலீசார் நடத்திய என்கவுண்டரில் மதுரையைச் சேர்ந்த ரவுடி அழகுராஜ் உயிரிழந்துள்ளார். ஜன.24ம் தேதி ரவுடி வெள்ளைகாளியை சிறைக்கு அழைத்துச்சென்றபோது, போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த கும்பலில் ரவுடி அழகுராஜூம் இருந்துள்ளார். இந்நிலையில், இந்த தாக்குதலில் 2 போலீசர் காயமடைந்த நிலையில், குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து, ரவுடி அழகுராஜை போலீசார் கைது செய்தபோது, போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றுள்ளார். அப்போது, போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் அழகுராஜ் உயிரிழந்தார். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிக்க: காதலனின் மனைவியை பழிவாங்க பெண் செய்த சதி.. HIV தொற்றுள்ள ஊசியை போட்டதால் அதிர்ச்சி..
ரவுடி வெள்ளை காளியை கொலை செய்ய முயற்சி:
மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளை காளியை வழக்கு விசாரணைக்காகப் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து சென்றுள்ளனர். திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் திருமாந்துறை டோல்கேட் அருகே போலீசார் வண்டியை நிறுத்தி ஹோட்டலில் உணவருந்தினார். அப்போது, அந்த ஹோட்டலுக்கு வெளியே சில போலீசார் காவலுக்கு நின்றுகொண்டிருந்தனர். இதனிடையே, சந்தேகம் ஏற்படாமல் போலீசார் வாகனத்தை பின்பற்றி சமயம் பார்த்து காத்திருந்துள்ளனர்.
நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல்:
போலீசார் ஹோட்டலில் நிறுத்திய சமயம், திடீரென்று இரு கார்களில் வந்த கும்பல், ஹோட்டலின் மீது அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசியது. தொடர்ந்து, அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெள்ளைக்காளியை வெட்டுவதற்கும் முயற்சி செய்துள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பில் இருந்த போலீசார் சுதாரித்துக்கொண்டனர். இதையடுத்து, வெடிகுண்டு வீசி தாக்குதலில் ஈடுபட முயன்ற கும்பலை நோக்கி எஸ்.ஐ ராமச்சந்திரன் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதனால், பதறிப்போன அந்தகும்பல் அங்கிருந்து கார்களில் தப்பியுள்ளனர். இதனிடையே, வெடிகுண்டு வீசியதில் ரவுடி வெள்ளை காளிக்கு பாதுகாப்பாக வந்த போலீசாரில் மருதுபாண்டி என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த சம்பவத்தில் வெள்ளைக்காளி உயிருடன் காப்பாற்றப்பட்டார்.
தப்பிய கும்பலை பிடிக்க தனிப்படை:
இந்நிலையில், போலீசார் மீது தாக்குதல் நடத்தி தப்பி சென்றவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதில், கடலூர் அருகே ரவுடி அழகுராஜா என்பவரை நேற்று மாலை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து, அழகுராஜாவிடம் நடந்த விசாரணையில் அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் வனப்பதியில் இருப்பதாக கூற, அதனை பறிமுதல் செய்ய போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு தான் மறைத்து வைத்திருந்த அறிவாளால் எஸ்.ஐ.சங்கரை தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளார்.
இதையும் படிங்க: சிறையில் காதலில் விழுந்த கொலை குற்றவாளிகள்.. அவசர பரோலில் திருமணம்.. நடுங்க வைக்கும் பின்னணி!
ரவுடி அழகுராஜா என்கவுடண்டரில் சுட்டுக்கொலை:
இதையடுத்து, காவல் ஆய்வாளர் நந்தகுமார் அவரை துப்பாக்கியால் சுட்டதில் தலையில் பலத்த காயமடைந்த ரவுடி அழகுராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து, காயமைந்த எஸ்.ஐ.சங்கர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதிகாலையிலேயே நடந்த இந்த என்கவுன்டர் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.