சிறையில் காதலில் விழுந்த கொலை குற்றவாளிகள்.. அவசர பரோலில் திருமணம்.. நடுங்க வைக்கும் பின்னணி!
Murder Convicts Fall In Love In Jail | ராஜஸ்தானை சேர்ந்த பிரியா மற்றும் பிரசாத் ஆகியோர் தாங்கள் செய்த கொடூர கொலைகளுக்காக சிறை தண்டனை பெற்று வந்துள்ளனர். இந்த நிலையில், 6 மாதங்களுக்கு சிறையில் சந்தித்துக்கொண்ட இவர்கள் காதலில் விழுந்த நிலையில், தற்போது திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.
ஆல்வார், ஜனவரி 24 : ராஜஸ்தான் (Rajasthan) மாநிலம் ஆல்வார் பகுதியில் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வந்த இருவர், சிறையில் காதலித்த நிலையில் திருமணத்திற்காக 15 நாட்கள் பரோலில் வந்துள்ளனர். அவர்கள் திருமணம் செய்துக்கொள்ள ராஸ்தான் உயர்நீதிமன்றம் பரோல் வவழங்கி உத்தரவிட்ட நிலையில், நேற்று (ஜனவரி 23, 2026) அவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. கொடூர கொலை செயலில் ஈடுபட்ட இருவர் காதலித்து திருமணம் செய்துக்கொண்ட விவகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சிறையில் காதலில் விழுந்த கொலை குற்றவாளிகள்
ராஜஸ்தானை சேர்ந்தவர் பிரியா சேத். மாடல் அழிகியான இவர் டேட்டிங் செயலியில் சந்தித்த நபரை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் இருந்துள்ளார். அவர் தனது கொலை குற்றத்திற்காக சங்கானர் திறந்த வெளி சிறையில் இருந்தபோது, 6 மாதங்களுக்கு முன்பு பிரசாத்தை சந்தித்த நிலையில் காதலில் விழுந்துள்ளார். காதலில் விழுந்த அவர்கள் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்த நிலையில், தற்போது பரோலில் வெளியே வந்துள்ளனர்.
இதையும் படிங்க : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.3 கோடியே 84 லட்சம் காணிக்கை!
கொடூர கொலைகளை செய்த பிரியா மற்றும் பிரசாத்
மே 02, 2018 அன்று பிரியா சேத் சிங் என்பவரை தனது காதலன் மற்றும் மற்றொரு ஆணுடன் இணைந்து கொலை செய்துள்ளார். சிங்கை கடத்தி அவரிடம் இருந்து பணம் பறித்து தனது காதலனின் கடனை அடைப்பது அவரது திட்டமாக இருந்தது. அவர் திட்டமிட்டபடி டிண்டர் செயலியில் சிங்கை சந்தித்த அவர், அவரிடம் நட்பாக பழகி அவரை தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அங்கு வைத்து காதலன் மற்றும் மற்றொரு ஆணின் உதவியுடன் பணத்தை பறித்த அவர், அவர்கள் மூலம் சிங்கை கொலை செய்து சூட் கேசில் அடைத்து மலையில் இருந்து வீசியுள்ளனர். மூன்று நாட்களுக்கு பிறகு அவரின் உடன் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், போலீசார் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க : ஜம்மு & காஷ்மீரில் கொட்டித் தீர்க்கும் கடும் பனி.. தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்!
5 பேரை கொலை செய்த பிரசாத்
ஒரே வீட்டை சேர்ந்த ஐந்து பேரை கொலை செய்த கொடூர குற்றவாளி தான் பிரசாத். அக்டோபர் 02, 2017 அன்று தனது காதலியின் அழைப்பை ஏற்று இரவு நேரத்தில் அவரது வீட்டிற்கு சென்ற பிரசாத் காதலி கேட்டுக்கொண்டதன் பேரில் காதலியின் கணவன், அவரது மூன்று பிள்ளைகள் மற்றும் உறவுக்கார சிறுவனர் ஒருவர் என மொத்தம் ஐந்து பேரை கொடூரமாக கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் இருந்து வந்துள்ளார். இத்தகைய கொடூர கொலைகளை செய்த இவர்கள் இருவரும் தற்போது திருமணம் செய்துக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.