Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜம்மு & காஷ்மீரில் கொட்டித் தீர்க்கும் கடும் பனி.. தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்!

National Highways Closed In Jammu and Kashmir | ஜம்மு மற்றும் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக சாலைகள் கடும் பனியால் மூடப்பட்டுள்ள நிலையில், அங்கு தேசிய நெடுஞ்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

ஜம்மு & காஷ்மீரில் கொட்டித் தீர்க்கும் கடும் பனி.. தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்!
சாலைகளை மூடிய பனி
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 24 Jan 2026 12:00 PM IST

ஜம்மு, ஜனவரி 24 : ஜம்மு மற்றும் காஷ்மீரில் (Jammu and Kashmir) கொட்டித் தீர்த்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக அங்கு தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. கடும் பனிப்பொழிவு காரணமாக அங்கு நேற்று (ஜனவரி 23, 2026) சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. அங்கு தொடர் பனிப்பொழிவி நிலவி வரும் நிலையில், தற்போது தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

15 ஆண்டுகளுக்கு பிறகு பனிப்பொழிவை சந்தித்துள்ள பூஞ்ச்

ஜம்முவில் உள்ள பூஞ்ச் நகரத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஆனால், தொடர்ந்து பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல ராம்பன், பாரமுல்லா, பதோத், தோடா, கிஷ்த்வார், பூஞ்ச், ரஜோரி, ரியாசி, உதம்பூர் மற்றும் கதுவா மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கடும் பனிப்பொழிவு தொடர்ந்து நீடித்து வருகிறது. அவ்வாறு கடும் பனிப்பொழிவு நீடித்து வரும் பகுதிகளில் சுமார் 5 அங்குலம் முதல் ஒரு அடி வரை பனி படர்ந்துள்ளது.

இதையும் படிங்க : Republic Day Parade 2026 : குடியரசு தின அணிவகுப்புக்கு தயார் நிலையில் டெல்லி.. நேரலை விவரங்கள் இதோ!

சாலைகளை மூடிய பனி

காஷ்மீரை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே சாலையான 270 கிலோ மீட்டர் ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பனிப்பொழிவை தொடர்ந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மக்கானா முதல் மைக்ரோசிப் வரை.. இந்தியாவின் வளர்ச்சிக் கதையை விவரிக்க உள்ள குடியரசு தின பேரணி

இதேபோல பனிஹால் – காசிகுந்த் பகுதியில் நவ்யுக் சுரங்கப்பாதையில் பனிப்பொழிவு காரணமாக ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கியும், ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இரு திசைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.