Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மக்கானா முதல் மைக்ரோசிப் வரை.. இந்தியாவின் வளர்ச்சிக் கதையை விவரிக்க உள்ள குடியரசு தின பேரணி..

Republic Day Showcase: தமிழ்நாட்டிற்கான அலங்கார ஊர்தியில், தமிழக நடனக் கலைஞர்கள் மயிலாட்டம் எனப்படும் பாரம்பரிய நடனத்தை நிகழ்த்த உள்ளனர். இதற்காக, சென்னையிலிருந்து 17 பேர் கொண்ட ஒரு குழு டெல்லி சென்றுள்ளது. ஜம்மு காஷ்மீர் ஒரு படகு வீட்டின் அழகை மீண்டும் உருவாக்கியுள்ளது.

மக்கானா முதல் மைக்ரோசிப் வரை.. இந்தியாவின் வளர்ச்சிக் கதையை விவரிக்க உள்ள குடியரசு தின பேரணி..
குடியரசு தின பேரணி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 23 Jan 2026 12:55 PM IST

டெல்லி, ஜனவரி 23: டெல்லி கண்டோன்மென்ட்டில் உள்ள ராஷ்ட்ரிய ரங்ஷாலா முகாமானது, குடியரசு தினத்திற்கு (ஜனவரி 26) முந்தைய தொடர்ச்சியான செயல்பாடுகளால் நிரம்பியுள்ளது. அங்கு புதிதாகப் பூசப்பட்ட வர்ணத்தின் மணம் காற்றில் தவழ, அணிவகுப்பு மைதானம் முழுவதும் கட்டுமானப் பணிகளின் சத்தம் எதிரொலித்து வருகிறது. கைவினை கலைஞர்களும், ஓவியர்களும் இறுதிகட்ட பணிகளில் மும்மூரமாக உள்ளனர், பல்வேறு தொழிலாளர்களும் பிரம்மாண்டமான கட்டமைப்புகளை கவனமாக சீரமைத்து வருகின்றனர். இந்த பரபரப்புக்கு மத்தியில், குடியரசு தின அலங்கார ஊர்திகளும் வடிவம் பெற்று வருகின்றன; ஒவ்வொரு சட்டகமும், வண்ணமும், விவரமும் கர்தவ்ய பாதையில் வசீகரிக்கும் கதைகளைச் சொல்லத் தயாராகி வருகின்றன.

மேலும் படிக்க: குடியரசு தின விழாவில் CRPF ஆண்கள் பிரிவை வழிநடத்தப்போகும் பெண் கமாண்டன்ட்.. யார் இந்த சிம்ரன் பாலா?

தயாராக உள்ள 30 அலங்கார ஊர்திகள்:

வந்தே மாதரம் பாடலின் 150 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், இந்த ஆண்டு ஜனவரி 26 அணிவகுப்பு நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாட்டின் உணர்வு ஒவ்வொரு படைப்பிலும் இழையோடியுள்ளது. இதற்காக நிறைவு நிலையில் சுமார் 30 அலங்கார ஊர்திகள் உள்ளன. ஒவ்வொன்றும் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் அதன் லட்சியங்களைப் பிரதிபலித்தன. கிட்டத்தட்ட 10,000 பேர் விரைவில் கர்தவ்ய பாதையில் இந்த ஊர்திகள் செல்வதைக் காண உள்ளனர். அதே நேரத்தில் 2,500 கலைஞர்கள் இந்நிகழ்ச்சிகளை வழங்கத் தயாராக உள்ளனர், இது சக்கரங்களில் நகரும் இந்த காட்சி விருந்துக்கு மகுடம் சூட்ட உள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் ஊர்தி:

இதில், மிகுந்த கவனத்தை ஈர்க்கும் ஒன்றாக, ‘ஆபரேஷன் சிந்துர்: ஒற்றுமையால் கிடைத்த வெற்றி’ என்ற தலைப்பிலான அலங்கார ஊர்தி உள்ளது. இது ரஃபேல் விமானங்கள் மற்றும் ஆகாஷ் ஏவுகணைகளைக் காட்சிப்படுத்தி இந்தியாவின் இராணுவ வலிமையை எடுத்துக்காட்டுகிறது. அதற்கு அருகிலேயே, குஜராத்தின் அலங்கார ஊர்தி ‘வந்தே மாதரம்’ என்ற கருப்பொருளின் கீழ் 1906 முதல் 1947 வரையிலான இந்தியாவின் பயணத்தைக் காட்டுகிறது; அதன் கட்டமைப்பிற்கு மகாத்மா காந்தியின் பிரம்மாண்டமான உருவம் ஒரு தூணாக அமைந்துள்ளது.

தலைநகரில் மாற்றத்தை பிரதிபலிக்கும் ஊர்தி:

குறிப்பாக இதில் டெல்லியின் அலங்கார ஊர்தி, பிரதம மந்திரிகள் அருங்காட்சியகத்திற்கு மரியாதை செலுத்துவதோடு, புதிய நாடாளுமன்றம், பாரத் மண்டபம், சிக்னேச்சர் பாலம் மற்றும் யஷோபூமி ஆகியவற்றை ஒரு மாறும் தேசத்தின் சின்னங்களாகக் காட்டி, தலைநகரின் மாற்றமடைந்த வானலையைக் காட்சிப்படுத்துகிறது.

மக்கானாவின் பயணத்தை விளக்கும் ஊர்தி:

மற்ற மாநிலங்களும் தங்கள் நிலப்பரப்புகளையும் பாரம்பரியங்களையும் தத்ரூபமாக உயிர்ப்பித்துள்ளன. பீகாரின் அலங்கார ஊர்தி, மக்கானாவின் பயணத்தை – குளத்திலிருந்து தட்டு வரை – சித்தரிக்கிறது. “இவை முழுவதையும் உருவாக்க ஒரு மாதம் ஆனது,” என்று அதனை உருவாக்கிய தச்சர் கூறினார். இமாச்சலப் பிரதேசம் தனது 1,203 வீர விருது பெற்றவர்களைக் கௌரவிக்கிறது, மேலும் பஞ்சாப் ஸ்ரீ குரு தேஜ் பகதூரின் ஆன்மீகத் துணிச்சலைத் தங்கள் அலங்கார ஊர்திகள் மூலம் பிரதிபலிக்கிறது.

மயிலாட்டத்துடன் தமிழக ஊர்தி:

தமிழ்நாட்டிலிருந்து வரும் நடனக் கலைஞர்கள் மயிலாட்டம் எனப்படும் பாரம்பரிய நடனத்தை நிகழ்த்த உள்ளனர். இதற்காக “சென்னையிலிருந்து 17 பேர் கொண்ட ஒரு குழு டெல்லி சென்றுள்ளது. லடாக் ஷியோக் சுரங்கப்பாதையின் பொறியியல் சாதனையை வெளிப்படுத்துகிறது, உத்தரகாண்ட் அதன் பாரம்பரிய இசைக்கருவிகள் மற்றும் பாத்திரங்களைக் காட்சிப்படுத்துகிறது, அதே நேரத்தில் ஜம்மு காஷ்மீர் ஒரு படகு வீட்டின் அழகை மீண்டும் உருவாக்குகிறது.

மேலும் படிக்க: குற்றவாளி முகம் தெரிந்தாலே அலெர்ட்.. குடியரசு தின பாதுகாப்பில் களமிறங்கும் AI கண்ணாடி!

இவ்வாறு, குடியரசு தினத்தன்று, இந்தத் தனித்தனிப் படைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து, வெளிப்பாட்டில் பன்முகத்தன்மை கொண்டதாகவும், நோக்கத்தில் ஒன்றுபட்டதாகவும் உள்ள இந்தியாவின் ஒரு நகரும் சித்திரத்தை உருவாக்க உள்ளன.